அந்திக் கிறிஸ்து வசனம் பவுல் சொல்லவில்லை. தவறாக உளர வேண்டாம்…..?
கேள்வி
அந்தி கிறிஸ்து வசனம் பவுல் சொல்லவில்லை ..அது யோவான் சொன்னது ..பைபிள் ஐ அரை குறையாக படித்துவிட்டு உளற வேண்டாம் பீஜே சார் ..பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்…மேலும் பைபிள் குறித்த உங்கள் புத்தகங்கள் அனைத்தும் கொமெடி புக்ஸ் ஐ மிஞ்சுகிறது ..நல்ல டைம் பாஸ் ..கீப் ட்ரையிங் ….
PJ அவர்களின் பதில்
நீங்கள் உங்கள் குருட்டு நம்பிக்கை அடிப்படையில் இருந்து கொண்டு இவ்வாறு கூறுகிறீர்கள். அந்திக் கிறிஸ்து பற்றிய செய்தி 1யோவானில் உள்ளது என்று தான் ஆதாரம் காட்டும் போது குறிப்பிட்டுள்ளோம். 1யோவானில் தான் அது உள்ளது. ஆனால் எங்களின் நம்பிக்கையும் பைபிள் ஆய்வாளர்களின் நம்பிக்கையும் உங்கள் நம்பிக்கையில் இருந்து மாறுபட்டதாகும். இயேசு சொல்லாமல் மற்றவர்கள் சொன்னதாக எழுதப்பட்ட நைத்துமே பவுல் கற்பனையாக உண்டாக்கியவை தான் என்பது எங்கள் நம்பிக்கை. குறிப்பாக நான்கு சுவிஷேசத்தின் பின் எழுதப்பட்டுள்ள அனைத்துமே அது பேதுருவின் பெய்ரால் எழுதப்பட்டிருந்தாலும் யோவானின் பெய்ரால் எழுதப்பட்டிருந்தாலும் எல்லாம் பவுல் எனும் சவுல் கற்பனையாக உருவாக்கியது தான், சிலுவைப்பலி என்ற கீறித்தவ் மதத்தின் நிறுவனரே பவுல் தான் . இயேசு அல்ல.
நேரடி விவாதத்தில் தான் யார் காமெடி என்பதை நிரூபித்து விட்டோமே