ஆதாமின் அடுத்த தலைமுறை ஹராமான முறையில் உருவானதா?
கேள்வி
*************************************
ஆதாம் எவாளில் இருந்து மனித இனம் தோன்றியது என்றால் ஆதாம் ஏவாளுக்கு ஒரு ஆண் ஒரு பெண் பிறந்து அந்த இருவரும் உடலுறவு கொண்டிருக்க வேண்டும்!
அல்லது ஆதாம் ஏவாளுக்கு பிறந்த மகளுடன் ஆதாம் உறவு கொண்டிருக்க வேண்டும்!அன்றேல் ஏவாள தனது மகனுடன் உறவு கொண்டிருக்க வேண்டும்!இந்த சான்ஸ் இல்லாமல் வேறு வழியில் அடுத்த தலைமுறை உருவாவதற்கு வழியில்லையே!அப்போ மொத்த மனித இனமே ஹராமா?
PJ அவர்களின் பதில்
முதலில் ஹராம் என்பதன் பொருளை அறிந்து கொள்ள வேண்டும். இப்போது ஒருவன் நிர்வானமாக நடமாடினால் அது ஹராம். தடுக்கப்பட்டது. ஆனால் ஆடைகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் ஒருவன் நிர்வானமாக நடமாடினால் அது ஹராம் அல்ல. ஏனெனில் அது போன்ற காலத்தில் ஆடை அணிவது கட்டாயம் என்று உத்தரவு போடுவது சாத்தியமில்லாதது.
உடன் பிறந்த சகோதரியைத் தவிர வேறு எந்த வகையிலும் மனித இனம் உற்பத்தியாக முடியாது என்ற நிலை இருக்கும் போது சகோதரனும் சகோதரியும் இணைவதைத் தவிர வேறு வழி இல்லை எனும் போது அது ஹராமாக தடுக்கப்பட்டதாக ஆக்கப்படவில்லை. தடை செய்ய்ப்படாத காலத்தில் செய்யும் எந்த ஒன்று ஹராமாக முடியாது.
இரு சக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் போட வேண்டும் என்ற சட்டம் வந்த பின் அதை போடாவிட்டால் அது சட்டப்படி குற்றம். இந்தச் சட்டம் வருவதற்கு முன் ஒருவர் ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினார் என்ற தகவல் உங்களுக்குத் தெரிய வந்தால் அவர் சட்டத்தை மீறினார் என்று கூறுவீர்களா?
இறைவன் தடை செய்தால் தான் அது ஹராமாகும். தடசெய்யாத் போது அது ஹராமாக ஆகாது. இப்படி அறிவுப்பூர்வமாக சிந்தித்தால் இபடி நீங்கள் கூற மாட்டீர்கள்.
இறைவன் நினைத்தான் இரண்டு ஜோடிகளைப் படைத்து அவர்கள் வழியாக மனித குலத்தைப் பலகிப் பெருக செய்திருக்க முடியும். ஆனால் இரு குலம் இருந்தால் கூட மனிதனுக்கு மத்த்யில் ஏற்றத்தாழ்வு கற்பிக்க அது காரண்மாகிவிடும். ஒரு ஜோடிமூல்ம தான் மனித குலம் பெருகியது என்ர நம்பிக்கை தான் மனித குலத்தில் சமத்துவத்தை நிலைக்க ச்செய்ய்ஜ் மென்பத்ற்காக இத்தகைய ஏற்பாட்டை இறைவன் செய்துள்ளான். இதை சரியாக நம்பும் முஸ்லிம்களிடம் மாத்திரம் ஜாதியின் பெயரால் உயர்வு தாழு கற்பித்தல் இல்லை. இந்த மாபெரும் நன்மக்க்காகத்த தான் இந்த ஏற்பாடு