இஞ்ஜீலை வைத்திருந்த அன்றைய காலத்து மக்கள் அதற்கு முரண்படும் பைபிளை எப்படி ஏற்றுக்கொண்டார்கள்?
கேள்வி
அஸ்ஸலாமு அலைக்கும் :
ஈஸா நபிக்கு அருளப்பட்ட இன்ஜீலை வைத்து , பய்பில் இறை வேதம் இல்லை என்று அப்பொழுது வாழ்ந்த மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் அல்லவா,பிறகு எப்படி இந்த bible யை ஏற்றுக்கொண்டார்கள் ?
அல்லது சர்ச்சைகள் ஏற்ப்பட்டதர்க்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள்.
சர்சைகள் ஏற்ப்பட்டிருப்பின் அசத்தியம் வென்றதன் பின்னணி என்ன ?
PJ அவர்களின் பதில்
மக்கள் எதை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்வார்கள். சிந்திக்காமல் மதிமயக்கத்தில் அதிகமான ம்க்கள் உள்ளனர். ஒரு மனிதன் தன்னை கடவுள் என்று சொன்னாலும் நம்புகிறார்கள் என்பதை நாம் பார்த்து வருகிறொம்.
கிறித்தவ மதத்தைப் பொருத்த வரை அதன் கட்டுப்பாடும் அதலைமையும் வருவாயும் அதன் போதகர்கள் கையில் உள்ளதால் அதிகமான மக்களை ஆதாயப்படுத்திக் கொண்டால் அதிமான பணத்தையும் அதிகாரத்தையும் ஆதாயப்படுத்திக் கொள்ளலாம். எனவே குருடர் பார்க்கிறார் எண்பது போல் புளுகி தீவிரமாக மக்களை ஏமாற்றுவதால் அதை நம்புகின்றனர். சிந்திக்கின்ற மக்களிடம் இது எடுபடாது.