இணை கற்பிக்க மாட்டேன். ஆனால் இறைவனுக்கு கட்டுப்பட மாட்டேன்
கேள்வி | என்னிடம் ஒரு கிறிஸ்துவ நண்பர் கேட்டார் நான் ஒரே கடவுள் என்பதை ஏற்று கொள்கிறேன் .இறைவனுக்கு உருவம் இல்லை என்பதையும் ஏற்கிறேன் . இறைவனின் தூதர் மீதும் நம்பிக்கை கொள்கிறேன் ஆனால் நான் விபச்சாரம் செய்வேன் , குடிப்பேன், தொழமாட்டேன்,நான் சொர்க்கம் செல்வேனா மாட்டேனா .இணை கற்பிக்க மாட்டேன் என்று அவர கூறிவிட்டார் |
PJ அவர்களின் பதில் |
நான் உங்களை கணவர் என்று ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் தந்தையை மாமனார் என்றும் ஏற்றும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் மற்ற ஆண்களுடனும் விபச்சரம் செய்வேன். நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன் என்று ஒரு மணைவி கணவனிடம் கூறினால் அவன் அதை ஏற்றுக் கொள்வானா? அல்லது இவள் கணவனைக் கணவனாகவே ஏற்கவில்லை என்பானா?நான் இந்தியாவை எனது நாடாக ஏற்றுக் கொள்வேன்.அதன் பிரதமரை நான் தலைவராக ஏற்றுக் கொள்வேன். ஆனால் இந்தியாவின் சட்டங்கள் எதற்கும் நான் கட்டுப்பட மாட்டேன். இந்தியாவில் தடுக்கப்பட்டவைகளை செய்வேன். நான் இந்தியாவை எனது தாய் நாடு என்று ஏற்றுக் கொண்டதால் இந்தியா என்னைத் தண்டிக்க கூடாது என்று சொன்னால் அதுசரி என யாரேனும் கூறுவார்களா? இந்தக் கேள்விக்குள் அவருக்கான பதில் அடன்கியுள்ளது |