இதுதான் பைபிள்
காலத்திற்குக் காலம், நாட்டுக்கு நாடு பைபிளில் சேர்த்தல்களும் நீக்கல்களும் நிகழந்து கொண்டேயிருக்கின்றன என்பதற்கு நமது நாட்டிலேயே ஒரு சான்றை உங்களுக்குக் காட்டுகிறோம். இதற்குப் பிறகு நிச்சயமாக, பைபிள் இறைவேதமன்று;மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்டது என்ற முடிவுக்கு நீங்கள் வந்தே தீர்வீர்கள். இதோ அச்சான்று:
1993ஆம் ஆண்டு நவம்பர்மாதக் கடைசியில் மதுரையில் நடந்த கிறித்தவ சமூக மாத இதழ் வெளியீட்டு விழாவில் மதுரை மறை மாநிலப் பேராயர்ஆரோக்கிய சாமி பேசும் போது, ‘தமழிகத்திலுள்ள பல்வேறு கிறித்தவப் பிரிவினரின் ஆயர்கள் ஒன்று கூடி ஒரே பைபிளை வடிவமைக்க முடிவு செய்தனர். இக்கூட்டத்தில் அனைத்து ஆயர்களும் ஏற்றுக் கொண்ட புதிய பைபிள் உருவாக்கப்பட்டது. இந்த பைபிளில் புதிய அதிகாரங்கள் மற்றும் சில பகுதிகள் சேர்க்கப்பட்டு அனைத்துப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் வரி வடிவம் பெற்றுள்ளது” என்று குறிப்பிட்டார். (தினகரன்–மதுரை 1-12-93)