Browse By

இறைத்தூதர்களின் தந்தை யார்?

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

download

கேள்வி
புகாரி 3443 ஹதிசின் படிஇறைத் தூதர்கள் ஒரே தந்தையின் பிள்ளைகள் ஆவர். அவர்களின் தாய்மார்கள் பலராவர். அவர்களின் மார்க்கம் ஒன்றே.என்பதின் விளக்கம் என்ன ?பைபிளில் இறைவனே எல்லோருக்கும் தந்தை என்ற வசனத்தை கொச்சை படுத்த நினைக்கு இஸ்லாமியர்கள் குரானில் முகமது அவர்களின் மனைவிகள் முஸ்லீகள் அனைவருக்கும் தாய் என்று சொல்லப்பட்டுள்ள வசனத்தை முழுமையாக மறந்து விடுகிறார்கள்.ஆனால் இந்த ஹதீஸின் படி அனைத்து இறைத்தூதர்களின் தந்தையார்?

PJ அவர்களின் பதில்
கடவுள் என்பவர் தனித்தவர். அவருக்கு பெற்றோரும் பிள்ளைகளும் இருக்கக் கூடாது. இது தான் கடவுள் குறித்த சரியான நிலைப்பாடாகும். கடவுளுக்கு பிள்ளைகள் இருக்கக் கூடாது என்றால் – அது கடவுள் தனமைக்கு இழுக்ககானது என்றால் இயேசுவையோ பிற மனிதர்களையோ கடவுளின் குமாரர்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்.

ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் தான் நாகரீகமுள்ள சமுதாயத்தில் இருக்க முடியும். ஒரு பெண் என் புருஷம்ன்மார்களே என்று சொன்னால் அல்லது உலகில் உள்ள எல்லா ஆண்களும் எனக்கு புருஷன்கள் என்று சொன்னால் அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இதைவிட மோசமான வார்த்தை தான் கடவுளின் குமாரர்கள் என்ற வார்த்தையும்.

கடவுளுடன் ஒப்பிடும் போது அற்பத்திலும் அற்பமான மனிதனைக் கடவுளில்ன் பிள்ளைகள் என்று சொல்வது கடவுளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தும். கடவுளின் தகுதியை அது குறைத்து விடும்.

ஆனால் நபிகள் நாயகத்தின் மனைவி மார்களை முஸ்லிம்களின் அன்னையர் என்று சொல்வதை இதனுடன் ஒப்பிடக் கூடாது. ஏனெனில் அன்னை என்ற சொற்பிரயோகம் பெண்களுக்கு கண்ணியம் சேர்ப்பதாகும். எந்தப் பெண்ணும் தன்னைவிட வயது குறைந்த ஆண்களை மகனே என்று கூப்பிடலாம். இப்படி கூப்பிடுவதை உலகில் யாருமே அருவருப்பாகப் பார்க்க மாட்டோம். அது போல் தன்னை விட வயது முதிர்ந்த எந்தப் பெண்ணையும் ஒருவன் அம்மா என்று அழைக்கலாம். இதையும் யாரும் இழிவாக கருத மாட்டோம். மேடைகளில் பேசும் போது தாய்மார்களே என்று அழைக்கலாம். என் பண்டாட்டிமார்களே என்று அழைக்க முடியாது.

அந்த அடிப்படையில் நபிகள் நாயகத்தின் மனைவியரை அன்னையர் என்கிறோம். இது மரியாதைக் குரியது தான். கேவல்மானது அல்ல.

கடவுளுக்கு பிள்ளைகள் இருப்பதாக நம்புவது கட்வுளைக் கேவலப்ப்டுத்தும் சொல் என்பதால் அது போன்ற சொற்களை மனிதர்களுக்குப் பயன்படுத்தாமல் கடவுளில் அடிமைகள் என்ற சொல்லைப் பயனபடுத்த இஸ்லாம் வழிகாட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: