Browse By

இஸ்லாம் குழந்தை திருமணத்தை ஆதரிக்கிற்தா?

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

1

கேள்வி
புஹாரி பாகம்- 4 அத்யாயம் – 67 (திருமணம்) ஹதீஸ் எண்: 5160

நபி அவர்கள் ஆயீஷா (ரலி) அவர்களை 6 வயதில் மணந்ததாக கூறுகிறது.

எனது கேள்வி: இஸ்லாம் குழந்தை திருமணத்தை ஆதரிக்கிறதா?

 

PJ அவர்களின் பதில்
அஸ்ஸலாமு அலைக்கும் இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் 378வது குறிப்பில் விளக்கியுள்ளோம். அந்த பகுதியை மட்டும் கீழெ தருகிறோம்.
இதன் பின்னர் சிறுமியானஆயிஷா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்தார்கள். இத்திருமணத்திற்கும்பெண் மோகத்தைக் காரணமாகக் கூற முடியாது. ஏனெனில் பெண் மோகத்தில் திருமணம் செய்பவர்உடனே அனுபவிக்கும் வகையில்தான் பெண்களைத் தேர்வு செய்வார். உடலுறவுக்குத் தகுதி பெறாதசிறுமியை யாரும் மணந்து கொள்ள மாட்டார்கள்.

சிறுமியை ஏன் திருமணம்செய்ய வேண்டும் என்ற கேள்வியும் பரவலாக எழுப்ப்ப்படுகிறது. எனவே இது பற்றியும் விபரமாகஅறிந்து கொள்வது நல்லது.

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட உடன் இஸ்லாத்தின் அனைத்துச் சட்டங்களும் ஒரே நேரத்தில்அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமாகவே அவர்களுக்கு அருளப்பட்டது.

எனவே இறைவனிடம் இருந்துஎது குறித்து சட்டம் அருளப்படவில்லையோ அந்த விஷயங்களில் அந்தச் சமுதாயத்தில் நிலவியபழக்க வழக்கங்களின்படியே அவர்கள் நடந்து கொண்டனர். அன்றைய மக்கள் மதுபானம் அருந்துவோராகஇருந்தனர். அது குறித்து இறைவனின் தடை உத்தரவு வருவது வரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும்தங்களின் பழைய வழக்கத்தையே தொடர்ந்தனர். இறைவன் தடை செய்யாததால் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களும் அதைத் தடை செய்யவில்லை.

அது போல் தான் சிறுவயதுப்பெண்ணை திருமணம் செய்வது அன்றைய அரபுகள் மத்தியில் சாதாரணமாக நடந்து வந்தது. சிறுமிகளைத்திருமணம் செய்யக் கூடாது என்ற தடை விதிக்கப்படுவதற்கு முன் அந்த வழக்கப்படி நபிகள்நாயகம் (ஸல்) அவர்களும் சிறு வயதுடைய ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.

பின்னர் திருமணத்திற்கானஒழுங்குகள் இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்டன. விபரமில்லாத சிறுமிகளைத் திருமணம்செய்வதை இஸ்லாம் முற்றாகத் தடை செய்தது.

இதைப் பின்வரும் சான்றுகளிலிருந்துஅறியலாம்.

நம்பிக்கை கொண்டோரே!பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.

திருக்குர்ஆன்4:19

அப்பெண்கள் உங்களிடம்கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள்.

திருக்குர்ஆன்4:21

கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது, “கன்னிப் பெண் (சம்மதம்தெரிவிக்க) வெட்கப்படுவாளே?”என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், “அவளது மௌனமே அவளது சம்மதமாகும்”என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி),

நூல்: புகாரி 6971, 6964, 5137

என் தந்தை எனது சம்மதம்பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.

அறிவிப்பவர்: கன்ஸாபின்த் கிதாம் (ரலி),

நூல்: புகாரி 5139, 6945, 6969

பெண்களுக்குக் கடமைகள்இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.

திருக்குர்ஆன்2:228

திருமணம் வாழ்க்கைஒப்பந்தம் எனவும் பெண்களுக்கு கடமைகளும், உரிமைகளும் உள்ளன என்றும் அவர்களின் சம்மதம்பெற வேண்டும் என்றும் மேற்கண்ட சான்றுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஒப்பந்தம் என்றால்அந்த ஒப்பந்தத்தின் பொருளை இருவரும் அறிய வேண்டும். சம்மதம் என்றால் எதற்குச் சம்மதிக்கிறோம் என்று இருவருக்கும் தெரிய வேண்டும்.கடமைகளும் உரிமைகளும் உள்ளன என்றால் அவற்றைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சிஅடைய வேண்டும்.

இதன் மூலம் சிறுவனுக்கோ, சிறுமிக்கோதிருமணம் செய்யக் கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டது.

இந்தச் சட்டம் இறைவன்புறத்திலிருந்து வருவதற்கு முன்னர் அந்தச் சமுதாயத்தில் பரவலாக பால்ய வயது திருமணம் நடந்து வந்தது. அந்தவழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் திருமணம் செய்தார்கள்

இத்திருமணம் நடந்தபிறகும் ஆயிஷா (ரலி) அவர்கள் தமது தந்தை வீட்டில்தான் இருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் மக்காவைத் துறந்து, மதீனா சென்ற பிறகுதான் ஆயிஷா (ரலி) பருவமடைகிறார்கள். அதன் பிறகுதான் நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவுடன் இல்லறம் நடத்தினார்கள்.

காமத்திற்காகத் திருமணம் செய்பவர் உடனடியாக அதை நிறைவேற்றிக் கொள்ளத்தக்கபெண்ணைத் தான் திருமணம் செய்வார்.

அபூபக்ர் (ரலி) அவர்கள்நபிகள் நாயகத்தின் உயிர் நண்பராக இருந்ததால் தமக்கும் நபிகள் நாயகத்திற்கும் ஒரு உறவைஏற்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு, அபூபக்ர் (ரலி) அவர்கள் வற்புறுத்தியதன் பேரில் அவரது மகளாகிய ஆயிஷா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்மணந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: