ஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை?
கேள்வி
நபி ஈசாவும் முஹம்மதும் அல்லாஹ்வால் இவ்வுலகத்துக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்றால்… ஈசா நபி ஏன் திருமணமே செய்துகொள்ளவில்லை?. இது இறைவனின் நியதிப்படி ஒவ்வொவொரு ஆணும் கட்டாயம் செய்துகொள்ளவேண்டிய விஷயம் அல்லவா?. முகமது நபி மட்டும் 12 மனைவிமார்களுடன் வாழ்ந்தது ஈசா நபிக்கு மட்டும் பொருந்தாதது ஏன்?
PJ அவர்களின் பதில்
ஈஸா நபி திருமனம் செய்யவில்லை எனபது பொய்யாகும். எல்லா இறைத்தூதர்களுக்கும் மனைவிமக்கள் இருந்தததாக் திருக்குர் ஆன் 13:38 வசனம் கூறுகிறது.
மோனோலிசா ஓவியம் வரைந்து புகழ்பெற்ற டாவின்ஸி எனும் ஓவியர் வரைந்த இயேசுவின் கடைசி விருந்து சம்மந்தப்பட்ட ஓவியத்திலும் இயேசுவுக்கு நெருக்கமாக ஒரு பெண் இருப்பதைக் காண முடிகிறது. மகதலேனா மரியாள் என்ற அந்தப் பெண் மூலம் மூலம் இயேசுவுக்கு பிறந்த மகள் குறித்து டாவின்சிகோட் என்ற திரைப்படத்தில் இது பல ஆதாரங்கள் மூல்ம எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இயேசு சிலுவைஅயில் அறையப்பட்டவுடன் மகதலேனா மரியாள் முதலில் வந்து பார்த்தவர்களில் ஒருவ்ராக குறிப்பிடபப்ட்டுள்ளார். இயேசுவுக்கு துறவி பொன்ற இமேஜ் கொடுத்தால் தான் மக்களிடம் மதத்தைப் பரப்ப எளிதாக இருக்கும் என்பதால் அவர்களின் குடும்ப்வாழ்க்கையை இருட்டடிப்பு செய்து விட்டனர்,