Browse By

உங்களைப்போல் நேர்வழிக்கு மக்களை அழைக்கக்கூடிய இதுப்போன்ற பணிகள் வேறு எந்த நாடுகளில் நடைப்பெறுகிறது?

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

197021_221770741292828_504608997_n

கேள்வி
பிஸ்மில்லாகிர் ரஹ்மானிர் ரஹீம்
மதிப்புக்குரிய ஜைனுல் ஆப்தீன் ஐயா!
தங்களுக்கு எனது நல் வாழ்த்துக்கள். கிறிஸ்தவத்தின் அடிப்படை இல்லாத கொள்கைகளை அடியோடு தகர்த்தெறிந்து எல்லா மக்களையும் நேர்வழியின் பக்கம் அழைக்கும் பணியை தங்களது இணையத்தளம் கச்சிதமாக செய்கிறது. இதே போன்ற முயற்சி வேறு எந்தெந்த நாடுகளில் நடைபெறுகிறது என எனக்கு கூற முடியுமா?

rameez-srilanka

PJ அவர்களின் பதில்
கிறித்தவர்களின் போலித் தனத்தையும் பைபிள் மனிதனால் எழுதப்பட்டது தான் என்பதையும், இயேசு இறைவனின் குமாரர் அல்ல என்பதியும் இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக கூறுவது பொய் என்பதையும் மற்றவரின் பாவங்களைசுமக்க இயேசு பலியானார் என்பது பைபிளுக்கு முரணானது என்பதையும் அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்துப் போடும் அறிஞ்ர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.நம்மை விட சிறப்பாக இதைச் செய்யக் கூடியவர்களும் உள்ளனர்.
ஆனால் கிறித்தவர்களிடம் செய்யும் பிரச்சாரத்தில் இது மட்டும் போதாது. குர்ஆனுக்கு எதிராகவும் ஹதீஸ்களுக்கு எதிராகவும் முஸ்லிம் சமுதாய நம்பிக்கைக்கு எதிராகவும் கிறித்தவ்ர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல முடியாத நிலையில் தவறான கொள்கையில் இருக்கிறார்கள்.
மதஹப் பற்றி அவர்கள் கேட்டால் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறுவது தான் சரியான பதில் ஆனால் அவர்களே மதஹ்ப் நம்பிக்கையில் உள்ளதால் இவ்வாறு கூற முடியாமல் உள்ளன. நபித்தோழர்கள் கூறிய சில சொற்களையும் செயல்களையும் சுட்டிக்காட்டி இஸ்லாத்தை அவர்கள் விமர்சனம் செய்தால் அதற்கும் மார்க்கத்துக்கும் சம்ம்ந்தம் இல்லை என்பது தான் சரியான் பதிலாக இருக்கும் அதைக் கூறினால் வாயடைத்து போவார்கள். அதுஇ எப்படி நபித்தொழர்களை நாம் விட்டுக் கொடுப்பது என்று முட்டுக் கொடுக்கும் நிலையில் உள்ளனர். இதனால் நாம் சொல்வது பொய் என்ற சித்திரம் ஏற்பட்டுகிறது. அது போல் குர் ஆனுக்கு முரணாக அமைந்துள்ள ஹதிஸ்களை பற்றி கேள்வி எழுப்பப்படும் போது குர் ஆனுக்கு முரணாக இருந்தால் அது நபி சொன்னது அல்ல என்று கூறுவது தான் சரியான் பதிலாக இருக்கும். ஆனால் அவர்களின் கொள்கை அவ்வாறு சொல்ல அவர்களை அனுமதிப்பதில்லை. அஹ்மத் தீதாத் போன்றவர்களும் இதில் விதி விகக்கு பெறவில்லை.
இதனால் என்ன ஏற்படுகிறது என்றால் கிறித்தவம் முற்றிலும் தவ்றானது இஸ்லாம் முற்றிலும் தவ்றானது அல்ல என்றாலும் அதிலும் சில் தவ்றுகள் குளறுபடிகள் இருக்கின்றன எனற நிலை தான் ஏற்படுகிறது.
குர் ஆனும் நபிவழியும் மட்டும் தான் இஸ்லாம். குர் ஆனுக்கு முரண்படும் ஹதிஸ்கள் நபி சொன்னது அல்ல என்ற கொள்கையில் இருந்து கொண்டு விவாதித்தால் கிறித்தவ்ம் முற்றிலும் தவ்று என்பதும் இஸ்லாம் முற்றிலும் உண்மை என்பதும் நிரூபிக்கப்படும். இந்த நிலைபாட்டில் இருந்து கொண்டு கிறித்தவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தவிர வேறு எந்த இயகமும் செய்வதாக தெரியவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: