கடவுளின் தோல்வி
மோசேக்குப் பின்னர்யோசுவா இஸ்ரவேலர்களின் தலைமைப் பொறுப்பேற்றதாகவும் அனைத்து இராஜாக்களையும் தோல்வியுறச் செய்து அவர்களின் நாடுகளைப் பிடித்துக் கொண்டதாகவும் யோசுவா ஆகமம் விரிவாகக் கூறுகின்றது.
‘… எருசலேமின் ராஜா, எப்ரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீஷின் ராஜா,எக்லோனின் ராஜா ஆகிய ஐந்து ராஜாக்களையும் குகையிலிருந்து அவனிடம் கொண்டு வந்தார்கள்.”
(யோசுவா 10:23)
‘அதன் பின் யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று ஐந்து மரங்களிலே தூக்கிப் போட்டான்.”
(யோசுவா 10:26)
எருசலேமின் ராஜா உட்பட ஐந்து ராஜாக்களை யோசுவா வெற்றி கொண்டதை இந்த வசனங்கள் அறிவிக்கின்றன. மேலும் 10:6-12 வரையிலான வசனங்களில் எருசலேம் நகர்வாசிகள் உட்பட அனைவரும் முறியடிக்கப்பட்டதும் அவர்களில் அனேகர்மாண்டதும் கூறப்படுகின்றன.
ஆனால் இதே ஆகமம் 15:63 வசனத்தைப் பாருங்கள்!
எருசலேமில் குடியிருந்து எபூசியரை யூதா புத்திரர்துரத்திவிட முடியாமற் போயிற்று. இந்நாள் மட்டும் எபூசியர்யூதா புத்திரரோடு எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.”
(யோசுவா 15:53)
யோசுவா உள்ளிட்ட யூதாவின் புத்திரர்கள் எருசலேமை முறியடித்ததாகக் கூறப்படுவது கர்த்தரின் வார்த்தையா? அல்லது அவர்களை வெல்ல முடியாமற் போயிற்று என்று கூறப்படுவது கர்த்தரின் வார்த்தையா?
கர்த்தரின் துணையுடன் கர்த்தரே நேரடியாகக் களத்தில் இறங்கியும் (யோசுவா 10:42)எருசலேமுள்ளவர்களை வெல்ல முடியவில்லை என்றால் தோல்வி கர்த்தருக்கில்லையா? இவற்றுக்கும் கிறித்தவ உலகில் விடையில்லை.