கிறிஸ்தவர்களுடன் விவாதம் செய்ய தவ்ஹீத் ஜமாஅத் ஆட்களை அனுப்புவீர்களா?
கேள்வி
சகோதரர் பி.ஜே அவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்). . . தற்போது நான் பணிபுரியும் துறையில் கிறிஸ்தவ நபர்களுடன் விவாதம் செய்து வருகிறேன். நான் கேட்கும் சில கேள்விகளுக்கு மலுப்பலான பதிலை தந்துவிட்டு பதில் சொல்லிவிட்டேன் என்கிறார்கள். மேலும் அவர்கள், எங்களைவிட ஒருவர் கிறிஸ்தவ கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறார் என்கிறார்கள். இப்போது நான் தவ்ஹீத் ஜமாத்தை அணுகலாமா. அந்த நபரிடம் பேச இந்த இயக்கத்தினர் வருவார்களா? இல்லை பெரிய பெரிய பாதிரியார்களிடம் மட்டும்தான் விவாதம் செய்வீர்களா? விளக்கம் தேவை. . . – ஜலால், திருநெல்வேலி
PJ அவர்களின் பதில்
நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகினால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவோம். அந்தப் பாதிரிமார்களுடன் விவாதிக்க தகுதியான அறிஞர்களை அனுப்பி வைப்போம். இன்ஷா அல்லாஹ்