கிறிஸ்தவர்களே… சிந்தியுங்கள்
பதினான்கு நூற்றாண்டுகளாக மாற்றமோ திருத்தமோ கூட்டலோ குறைத்தலோ செய்யப்படாமல் உலகெங்கும் ஒரே விதமாக அமைந்திருக்கும் ஒரே வேதம் குர்ஆன். பைபிளில் இருப்பது போன்ற நகைப்பிற்கிடமான சட்டதிட்டங்கள் ஏதும் குர்ஆனில் கிடையாது; ஆபாசம் கிடையாது; முரண்பாடு கிடையாது; ஒழுக்கக் கேடுகளை ஆதரிக்கும் போக்குக் கிடையாது!
குர்ஆன் மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைக்கும் சரியான வழி காட்டுகிறது! அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வைத் தருகிறது!
இயேசு உள்ளிட்ட எல்லாத் தீர்க்கதரிசிகளையும் புகழ்ந்து போற்றுகிறது. அவர்களது சேவைகளையும் தியாகங்களையும் மதிக்கிறது.
தீர்க்கதரிசிகள் மது அருந்தியதாக, விபச்சாரம் செய்ததாகச் சுமத்தப்பட்ட களங்கங்களையெல்லாம் திருக்குர்ஆனே துடைத்தெரிந்தது.
அருமைக் கிறித்தவ நண்பர்களே! ஒரு முறையாவது திருக்குர்ஆனைக் கருத்தூன்றிப் படியுங்கள்! உங்கள் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை அது ஏற்படுத்துவதை அறிந்து கொள்வீர்கள்! அதன் மூலம் இஸ்லாத்தின் பால் உங்கள் பார்வைகளைத் திருப்புவீர்கள்! எங்கள் எதிர்பார்ப்பு வீணாகாது என்று நம்புகிறோம். இறைவன் உங்களுக்கும் எங்களுக்கும் நேர்வழி காட்ட பிரார்த்தனை செய்கிறோம்.
இப்னு பீர்