கிறிஸ்தவர்கள் ஆமின் என்று ஏன் கூற வேண்டும்?
கேள்வி
அஸ்ஸலாமு அழைக்கும்
கிருஸ்தவர்கள் தங்களுடைய வணக்க வழிபாடுகளில் அதிகமாக பயன்படுத்தும் ” ஆமீன்” என்பது குறித்து விளக்கம் தேவை. உங்கள் பதிலை எதிர்பார்த்தவனாக.
PJ அவர்களின் பதில்
தமிழ்மொழியும் மலையாள மொழியும் வெவ்வேறு மொழிகளாக இருந்தாலும் ஒன்றில் இருந்துமற்றொன்று பிறந்த்தால் பல சொற்கள் இரு மொழிகளிலும் ஒரே பொருளில்பயன்படுத்தப்படுவதைக் காணலாம். எவ்விடம் என்று நாம் சொன்னால் அவர்கள் எவிட என்றுகூறுவார்கள். இது போல் பல சொற்களைக் காணலாம். தமிழுக்கும் மலையாளத்துக்கும் உள்ளநெருக்கத்தை விட அரபு மொழிக்கும் ஹிப்ரு மொழிக்கும் இடையே அதிக நெருக்கம் உண்டு.அரபு மொழியில் உள்ள அலிஃப் உள்ளிட்ட எழுத்துக்கள் அதே பெயரில் ஹிப்ருவிலும் உண்டு.அது போல் இரு மொழியிலும் பயன்படுத்தப்படும் சொற்களில் ஆமீன் என்பதும் அடங்கும்.ஹிப்ருவில் ஆமென் என்று கூறுவார்கள். அரபு மொழியில் ஆமீன் எனக் கூறுவார்கள்.உச்சரிப்பில் உள்ள இந்த சின்ன வித்தியாசம் உள்ளதே தவிர இரண்டுக்கு ஏறக்குறைய ஒரே அர்த்தம்தான்.