கிறிஸ்தவ மதத்தை உண்டாக்கியது ஏசுவா? பவுலா?
கேள்வி
பணத்துக்கு தான் பவுல் கிறிஸ்தவ மதத்தை உருவாக்கினார் ஏசுவோ ஏசுவின் சீடர்களோ இல்லை என்று கூறுகிறீர்கள்.பிறகு ஏன் பவுல் உள்பட ஏசுவின் சீடர்கள் அனைவரும் ரத்த சாட்சிகளாக ,கொடூரமாக கொல்லப்பட்டனர் ?
PJ அவர்களின் பதில்
பவுல் கொல்லப்பட்டாரா இயற்கையாக மரணித்தாரா என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் அவரைக் கொலை செய்ய யூதர்கள் முயற்சித்தனர், பின்னர் சிறையில் அடைத்தனர். இதற்குக் காரணம் யூத ஆலயங்களுக்குள் யூதர் அல்லாதவரகளை நுழையச் செய்தது தான். இதை யூதர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். இயேசு கூட யூதர் அல்லாதவர்களை விரட்டி அடித்திருக்கும் போது இவர் அதை மீறியதால் கடும் எதிர்ப்புக்கு ஆளானார். அவர் கொல்லப்பட்டதாகவெ வைத்துக் கொண்டாலும் கிறித்தவ மதத்தை பவுல் உண்டாக்கவில்லை என்று ஆகிவிடுமா? பவுல் தான் உண்டாக்கினார் என்பதற்கு நாம் ஆதாரங்களை காட்டியுள்ளோம். பவுல் உண்டாக்கவில்லை இயேசு தான் இந்த மார்க்கத்தை உண்டாக்கினார் என்று கூறுவோர் அதற்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டி மறுக்க வேண்டும்.