குர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்?
கேள்வி
அஸ்ஸலாமு அலைக்கும் கிறித்துவர் ஒருவர் இந்த கேள்வி என்னிடம் கேட்கிறார்கள் இதற்கு பதில் சொல்லவும் …….குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் உண்டு? மொத்தம் 114 என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். ஆனால், முஹம்மதுவின் தோழரும், முஹம்மதுவின் நெருங்கிய வட்டாரங்களில் ஒருவராக இருந்தவரும், மற்றும் மூல குர்ஆனின் கைப்பிரதியை வைத்திருந்தவர்களில் ஒருவருமாகிய “உபை இப்னு கஅப் ” என்பவரிடம் 116 அதிகாரங்கள் (சூராக்கள்) இருந்தன. உஸ்மான் குர்ஆனை தொகுப்பதற்கு முன்பு இவரிடம் இரண்டு அதிகாரங்கள் அதிகபடியாக இருந்தன. அவைகளை அஸ்ஸூயுதி என்பவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு சூராக்களும் குர்ஆனின் முதல் சூராவாகிய அல் பாத்திஹா போலவே ஒரு வேண்டுதல் வடிவில் உள்ளது.
PJ அவர்களின் பதில்
நீங்கள் சொல்வது போல் குர் ஆனை எழுதிய சிலர் கூடுதல் குறைவாக எழுதி இருந்தார்கள்.
திருக்குர் ஆன் நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் ஒலி வடிவமாக அருளப்பட்டது. அதை இன்னும் பல நபித்தோழர்களும் மனனம் செய்திருந்தார்கள். சிலர் எழுதியும் வைத்து இருந்தார்கள். மனிதர்கள் என்ற் முறையில் ஓரிருவர் கூடுதல் குறைவாக எழுதி இருந்தால் அனைவரின் எழுத்துக்களையும் மனனத்தில் உள்ளதையும் திரட்டி யார் கூடுதலாக எழுதினார் குறைவாக எழுதினாஎ என்று கண்டுபிடிப்பது சிரமமானதல்ல.
இப்னு மஸ்வுது என்பவர் 112 அத்தியாயங்கள் என்றார். கடைசி இரு அத்தியாயங்களும் நபிகள் கற்றுத்தந்த பிரார்த்தனை என்று அவர் கருதிக் கொண்டார். எல்லா எழுத்தர்கலூம் அதை குர் ஆனில் எழுதியிருந்ததை வைத்து இவர் தவறாக கருதியது கண்டுபிடிக்கப்பட்டது. அது போல் நபிகள் கற்றுக் கொடுத்த இரண்டு பிராரத்த்னைக்ளை குர் ஆன் என்று எண்ணிக் கொண்டு உபை பின் கஃபு எனபார் 116 அத்தியாயம் என்றார். இவர் எழுதியது போல் வேறுன் ஒரு எழுத்தரும் எழுத்விலை, மனனம் செய்தவர்களின் மனனத்திலும் இவர் எழுதிக் கொண்ட படி இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இவர் இரண்ட்டு பிரார்த்தனக்ளை குர் ஆன் என்று தவ்றாக எண்ணி விட்டார் என்று ஒட்டு மொத்த சமுதாயமும் கண்டு பிடித்து விட்ட பின் இபபடி வாதிக்கலாமா
இது குறித்து திருக்குர் ஆன் த்மிழாக்கம் முன்னுரையில் நாம் எழுதியதை வாசிக்கவும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசனங்களை எழுதச்சொல்லும் எல்லா நேரத்திலும் எல்லா எழுத்தர்களும் மதீனாவில் இருந்திருக்க மாட்டார்கள்.சில வசனங்கள் அருளப்படும் போது வெளியூரில் இருந்தவர்கள் தமது ஏடுகளில் அந்த வசனங்களைஎழுதியிருக்க மாட்டார்கள். இதனால் ஒவ்வொரு எழுத்தருடைய ஏடுகளிலும் ஏதேனும் சில வசனங்களோ, அத்தியாயங்களோ விடுபட்டிருக்க வாய்ப்பு இருந்தது.
ஒவ்வொரு எழுத்தரும், தம்மிடம் உள்ளதுதான் முழுமையான திருக்குர்ஆன் என்று தவறாக எண்ணும்போது திருக்குர்ஆனில் முரண்பாடுஇருப்பது போல் தோன்றும்.
அனைத்து எழுத்தர்களின் அனைத்து ஏடுகளையும் ஒன்றுதிரட்டி, மனனம் செய்த அனைவர் முன்னிலையிலும் சரிபார்த்தால்ஒவ்வொருவரும் எந்தெந்த வசனங்களை அல்லது அத்தியாயங்களை எழுதாமல் விட்டுள்ளார் என்றுகண்டறிய இயலும்.
இந்தப் பணியைத்தான் ஸைத் பின் ஸாபித் என்ற நபித்தோழர் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்கள் செய்துமுடித்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டிலிருந்தஏடுகளையும், திருக்குர்ஆன் எழுத்தர்களிடமிருந்த ஏடுகளையும் ஸைத் பின் ஸாபித் (ரலி) திரட்டினார்கள்.மனனம் செய்தவர்களை அழைத்து அவர்கள் மனனம் செய்தவற்றையும் எழுத்து வடிவமாக்கினார்கள்.
இவற்றைத் தொகுத்து, மனனம்செய்திருப்பவர்களுடைய மனனத்திற்கு ஏற்ப ஏடுகளைச் சீர்படுத்தினார்கள்.