Browse By

கேள்வி பைபளில் உள்ள எதிர் கிறிஸ்து முகம்மதுதான் .அது எப்படிஎன்றால் கிறிஸ்துவிற்கு சமமாக தன்னை உயர்த்தி சொல்லியதுதான் .

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

bible3_xlarge

கேள்வி
பைபளில் உள்ள எதிர் கிறிஸ்து முகம்மதுதான் .அது எப்படிஎன்றால் கிறிஸ்துவிற்கு சமமாக தன்னை உயர்த்தி சொல்லியதுதான் .

PJ அவர்களின் பதில்

இது பற்றி பவுல் கூறுவது இது தான்:

22. இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்றுமறுதலிக்கிறவனேயல்லாமல் வேறேயார் பொய்யன்? பிதாவையும்குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
1-யோவான் 2:22

நபிகள் நாயகமும் நாங்களும் இயேசு இறைவனின் குமாரன் அல்ல என்று பெருமையுடன்சொல்கிறோம். இதன் காரண்மாக நாங்கள் அந்திக்கிறிஸ்து என்று சொன்னால் அதில்எங்களுக்கு பெருமை தான். ஏனெனில் இயேசு சொன்ன அதே கொள்கையைத் தான் நாங்கள்சொன்னவர்களாக ஆவோம். பவுலுக்குத் தான் நாங்கள் எதிரிகள்.

ஆனால் பவுலைத் தூக்கிப் போட்டு விட்டு இயேசு யாரை எதிரிகள் என்று அடையாளம் காட்டினாரோஅவர்களை மத குருமார்களாக ஆக்கிக் கொண்டுள்ள நீங்கள் தான் இயேசுவின் எதிரிகள்.

இதோ இயேசு தனது எதிரிகளை இனம் காட்டுவதைப் பாருங்கள்

தங்கள் கிரியைகளையெல்லாம்மனுஷர் காண வேண்டுமென்று செய்கிறார்கள்.; தங்கள் காப்பு நாடாக்களை அகலமாக்கி தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கிவிருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்.நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார். நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்;! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப்பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்;! கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார.

மத்தேயு 23:5

மேலே இயேசு சொன்னபடி நடப்பவர்கள் தான் உங்கள்பாதிரிமார்கள். மக்களிடமிருந்து தனித்துக் காட்டும் வகையில் நாடாக்கள் கொணட்ஆடைக்ளை நீளமான தொங்கலுடன் அணிபவர்களும் பாதர் என்று சொல்லக் கூடாது என்று இயேசுசொல்லி இருந்தும் பாதர் என்று சொல்வதை விரும்பும் பாத்ரிகளும் அவ்வாறு அழைக்கும்நீங்களும் இயேசுவின் எதிரிகள் என்பதில் சந்தேகம் இல்லை.

அன்றியும் நீஜெபம் பண்ணும் போது மாயக்காரரைப் போலிருக்க வேண்டாம்;. மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும்வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ணவிரும்புகிறார்கள்.; அவர்கள் தங்கள்பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம் பண்ணும்போது உன் அறை வீட்டிற்குள் பிரவேசித்து உன் கதவைப் பூட்டி அந்தரங்கத்திலிருக்கிற உன்பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு!; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும் போது அஞ்ஞானிகளைப் போல வீண் வாரத்தைகளை அலப்பாதேயுங்கள்!; அவர்கள் அதிக வசனிப்பினால் தங்கள்ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப் போல நீங்கள் செய்யாதிருங்கள்!; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

மத்தேயு6:5-8

ஜெபம்பண்ணுகிறோம் என்ற பெயரில் கண்னை மூடிக் கொண்டு காட்டுக் கத்தல் போட்டுக் கொண்டுசெய்றகையக உருக்கம் காட்டி கடவுளையும் இயேசுவையும் இறங்ங்ங்ங்குவீ………..ரா…………….கஎன்று நாடகம் போடும் நீங்கள் தான் இயேசுவின் எத்ரிகள் என்பது மேற்கண்ட இயேசுவின்வாயாலேயே வெளியாகி விட்ட்து.

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ!மனுஷர் பிரவேசியாதபடி பரலோக ராஜ்யத்தைப் பூட்டிப் போடுகிறீர்கள்;. நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை.பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை. மாயக்காரராகிய வேதபாரகரே!பரிசேயரே! உங்களுக்கு ஐயோ! பார்வைக்காக நீண்ட ஜெபம் பண்ணி விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்;. இதினிமித்தம்அதிக ஆக்கினையை அடைவீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ! ஒருவனைஉங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித் திரிகிறீர்கள்.அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

மத்தேயு23:13-15

மதமாற்றம்செய்து ஆள் பிடிப்பதற்காக தொண்டு நிறுவனம் என்ற பெய்ரில் நீஙக்ள் போடும் ஆட்டம்எல்லாம் இயேசுவுக்கு நீங்கள் தான் எதிரிகள் என்று சொல்கின்றன.

உங்கள் கச்சைகளில்பொன்னையாவது வெள்ளியையாவது செம்பையாவது வழிக்காகப் பையையாவது இரண்டு அங்கிகளையாவதுபாதரட்சைகளையாவது தடியையாவது தேடி வைக்க வேண்டாம்;! வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.

மத்தேயு10:9,10

ஒவ்வொருபாதிர்யையும் பங்குத் தந்தை என்ற பெயரில் கோடிகளூக்கு அதிபதிகளாக்கி நீங்கள்ஓட்டாண்டிகளவும் இருப்பதே இயேசுவுக்கு யார் எதிரி என்பதைக் காட்டவில்லையா?

கள்ளத் தீர்க்கதரிசிகளுக்குஎச்சரிக்கையாயிருங்கள்!;அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்;. உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

மத்தேயு 7:15

குருடரான வழிகாட்டிகளேகொசுயில்லாதபடி வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள். மாயக்காரராகியவேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ!

போஜன பான பாத்திரங்களின்வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்.; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. குருடனானபரிசேயனே! போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தைமுதலாவது சுத்தமாக்கு. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ!

வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள்.அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும். உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும்சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள்என்று புறம்பே காணப்படுகிறீர்கள்;. உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். மாயக்காரராகியவேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ. நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டிநீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து: எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால்அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப் பழிக்கு உடன்பட்டிருக்க மாட்டோம் என்கிறீர்கள்.

மத்தேயு 23:24-30

அந்நாளில் அநேகர்என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம்அல்லவா? உமது நாமத்தினாலேஅநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை;. அக்கிரமச் செய்கைக்காரரே என்னைவிட்டுஅகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

மத்தேயு7:22- 23

இந்த வன்ங்களை ஒழுங்காக வாசித்து இயேசுவுக்கு எதிரிகளாக ஆக்கும் மதகுருமார்வழியை விட்டும் பவுல் உண்டாக்கிய மார்க்கத்தை விட்டும் விலகி இயெசுவின்மார்க்கத்துக்கு அப்படியே உயிர் கொடுக்கும் இஸ்லாத்தில் சேர்ந்து இயேசுவுக்குநன்பர்களாகவும் பவுலுக்கு எதிரிகளாகவும் ஆவோம் என்று அழைக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: