சீடர்கள் வந்த நோக்கம்
இயேசுவின் உடலை யாரோ கடத்திச் சென்று விட்டார்களா என்பதைப் பார்க்க சீடர்கள் ஓடி வந்தார்களா? இயேசு உயிர்த்தெழுந்ததை உறுதி செய்வதற்காக வந்தார்களா என்பதிலும் முரண்பாடு உள்ளது.
இயேசு உயித்தெழுந்தார் என்று தூதர்கள் கூறியதை அந்தப் பெண்கள் சீடர்களிடம் கூறிய போது சீடர்கள் அதை நம்பவில்லை எனவும், அதை உறுதி செய்வதற்காக பேதுரு கல்லறைக்கு வந்ததாக லூக்கா கூறுகிறார்.
இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண் பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை. பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்து பார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக் கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக் கொண்டு போனான்.
லூக்கா 24:11,12
ஆனால் யோவான் இது பற்றிக் கூறும் போது இயேசுவின் உடலை யாரோ கடத்திக் கொண்டு போய்விட்டதாக மகதலேனா மரியாள் சொன்னதை உறுதி செய்யவே பேதுருவும் இன்னொரு சீடரும் வந்ததாகக் கூறுகிறார்.
உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள். அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள். யோவான் 20:2,3
கர்த்தர் பிரியன்