ஜின்களுக்கு இயற்கையாகவே வானத்தை கடக்கும் ஆற்றல் இருக்கும் போது, ஆற்றல் இல்லாமல் வானத்தை கடக்க முடியாது என்று இறைவன் ஏன் கூற வேண்டும்?
கேள்வி
அஸ்ஸலாமு அழைக்கும்,
அல் குரான் 55:33
மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.
இந்த வசனத்தில் மனிதன் மற்றும் ஜின்களை குறித்து பேசுகிறது .
மனிதன் விண்ணுலகம் செல்ல ஆற்றல்(விமானம் அல்லது ராக்கெட்) தேவை.ஜின்களுக்கு அந்த ஆற்றல் ஏற்கனவே இருக்கிறதே
பிறகு ஏன் ஆற்றல் தேவை யான குறிப்பிடபடுகிறது .
PJ அவர்களின் பதில்
ஆற்றலுடன்தான் செல்ல முடியும் என்பது ஜின்களுக்கும் உரியது தான். அவர்களுக்கு இயல்பாகவேஅந்த ஆற்ரல் உள்ளது. மனிதனுக்கு இயல்பாக அந்த ஆற்றல் இல்லை. இதுதான் வித்தியாசம்.
மேலும்இது எல்லா மொழிகளிலும் உள்ள வழக்கத்தை ஒட்டி சொல்லப்பட்டதாகும்.
ஒழுக்கமானவர்களும்ஒழுக்கமில்லாதவர்களும் ஒரு சபையில் இருக்கும் போது நீங்கள் ஒழுக்கமாக நடந்தால்பரிசு தரப்படும் என்று சொல்கிறோம். இருவரையும் பார்த்து சொல்வதால் ஒழுக்கமானவரைஒழுக்கமற்றவராக ஆக்கி விட்டோம் என்று யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
ஒருசபையில் கால் ஊனமுற்றவர்களும் ஊனமில்லாதவர்களும் இருக்கும் போது வேகமாக நடப்பதுஉடலுக்கு நல்லது என்று கூறுவோம். இருவர் அங்கே இருந்தாலும் இது ஒரு சாராருக்குமட்டும் தான் என்று புரிந்து கொள்கிறோம். இது போல் ஏராளமான உதாரணங்களைக் கூறலாம். எல்லாமொழிகளிலும் இது போன்ற சொல் வழக்கு உள்ளது.
இருசாரார் ஒன்றாக இருக்கும் போது அவர்களில் ஒரு சாரார் சம்மந்தப்பட்ட்தை மட்டும் நாம்கூறினால் சூழ்நிலையை வைத்து இது ஒரு சாராருக்கு உரியது என்று நாம் புரிந்து கொள்கிறோம்.வார்த்தையை வைத்து புரிந்து கொள்வதில்லை. இதற்கு இலக்கிய நூல்களில் ஆதாரங்கள்உள்ளன.
மனிதனும்ஜின்னும் வானுலகம் செல்ல முடியும். இதில் இருவரும் ஒன்று படுகிறார்கள். ஆனால்ஜின்களுக்கு இயல்பாகவே அந்த ஆற்றல் உள்ளது. மனிதர்களுகு இயல்பாக அந்த ஆற்றல்இல்லை. இப்போது ஆற்றல் இல்லாமல் போகலாம் என்று கூறினால் அது மனிதனுக்குபொருந்தாமல் போய் விடும். ஏதாவது ஒரு சாராரைத்தான் சொல்ல் முடியும் எனும் போது இதுபோல் பேசுவது முரணாக கருதப்படாது