தவ்ராத்திற்கும், இன்ஜிலுக்கும் நெருக்கமாக உள்ள கிறிஸ்தவப் பிரிவு எது?
கேள்வி
பிஸ்மில்லாகிர் ரஹ்மானிர் ரஹீம்
ஐயா! கிறிஸ்தவ மதத்தில் இன்றுள்ள பல பிரிவுகள் கனவே போன்ற கொள்கைகளில் மூழ்கி பரலோக ராஜ்ஜிய வெற்றியை தொலைத்துவிட்டன.
ஆதி இன்ஜீலுக்கும் தௌராதிட்கும் ஓரளவாவது நெருங்கியிருக்கக்கூடிய கிறிஸ்தவப் பிரிவு எது என கூற முடியுமா?
PJ அவர்களின் பதில்
கிறித்தவர்கள் எத்தனை பிரிவுகளாக ஆனாலும் சட்டதிட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் ஆளுக்கொரு வழியில் சென்றாலும் இறை வேதம் என்று அவர்கள் நம்பும் பைபிளையே ஆளுக்கு ஒரு விதமாக உருவாக்கிக் கொண்டாலும் அவர்கள் அனைவருமே ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்கு – கர்த்தருக்கு -இணைகற்பிக்கக் கூடியவர்களாக உள்ளனர். அனைவருமே இயேசுவை கடவுள் என்றும் கடவுளின் மகண் என்றும் கூறுவதில் ஒருமித்த கருத்தில் உள்ளனர். ஒரு இறைவனை மட்டுமே வனங்க வேண்டும்; அவனைத்தவிர யாரையும் எதனையும் வனங்கக் கூடாது என்று போதிக்கவே தவ்ராத் இஞ்சீல் வேதங்கள் அருளப்பட்டன. எனவே கிறித்தவர்களின் எந்தப் பிரிவும் தவ்ராத் இஞ்சிலுக்கு நெருக்கமாக இல்லை