நபிகள் நாயகத்தை முன்னர் வாழ்ந்த தூதர்களிடம் கேட்கச் சொல்லும் குர்ஆன் வசனம் முரன்பாடாக உள்ளதே?
கேள்வி
43:45 என்ற வசனத்தின் படி நபிக்கு முன் அனுப்பிய தூதர்கள் யாரும் நபியின் காலத்தில் இல்லாதபோது எப்படி முன் அனுப்பிய தூதர்களிடம் முஹம்மது (நபி ) கேட்க முடியும்? இது முரண்பாடாக இல்லையா என்ற கேள்வி வருகிறது விளக்கவும்
PJ அவர்களின் பதில்
எல்லா மொழிகளிலும் இது போன்ற சொற்பிரயோகங்கள் அதன் நேரடி பொருளில் பயன்படுத்தப்படாமல் வேறு பொருளில் பயனபடுத்தப்படுகின்றன. ஒரு சம்பவம் குறித்து பேசும் போது ஊரைக் கேட்டுப்பார் என்று சொல்வோம். ஊரில் உள்ளவர்கள் என்பதைத் தான் இப்படி நாம் சொல்கிறோம். உங்களுக்கு சந்தேகம் வந்தால் வள்ளுவரிடம் கேளுங்கள் என்று கூறலாம். வள்ளுவர் எழுதிய குரளில் தேடிப்பருங்கள் என்பது தான் இதன் பொருள். மார்க்கத்தில் சந்தேகம் வந்தால் அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் கொண்டு செல்லுங்கள் என்று கூறினால் அல்லாஹ்வின் வேதத்துடன்னும் நபியின் போதனைகலுடனும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பது தான் கருத்து. அது போல் முன்னர் சென்ற தூதர்களிடம் கேள் என்றால் அவர்கள் செய்து விட்டு சென்ற போதனைகளைப் பற்றி விசாரித்துப் பார் என்பது கருத்தாகும். எல்லா மொழிகளிலும் இது போன்ற் சொற்பிரயோகங்களை நாம் காணலாம்.