பாரிசம் என்பதின் பொருள் என்ன?
கேள்வி
அஸ்ஸலாமு அழைக்கும்
பைபிளில் பாரிசம்,வலது பாரிசம், இடது பாரிசம் இதை எப்படி அர்த்தம் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும்…
இயேசு அவர்கள் பிதாவின் மடியில் இருக்கிறார்
அங்கிருந்து வெளிபட்டார் ……பாரிசம்னா என்ன? விளக்கவும்…..அவர்கள் இதை வைத்து நிறைய குழப்பத்தை மக்களிடையே உண்டுபண்ணி விட்டார்கள்….சரியான விளங்காத காரணத்தால்….வஸ்ஸலாம்
PJ அவர்களின் பதில்
பாரிசம் என்றால் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும். அவர் பாரிச நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். வலது பாரிசம் வலது பக்க மூளை பாதிக்கப்பட்டுள்ளது ஏன்று பொருள் கொள்ளலாம். பாரிசம் என்பதற்கு திசை என்ற பொருளும் உள்ளது. வலது பாரிசம் என்றால் வலது திசை என்று பொருள் கொள்ளலாம்.
இயேசு தான் கடவுள் என்றால் அவர் ஏன் கடவுளின் வலது பாரிசத்தில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது என்று நீங்கள் கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் கிறித்தவ பாதிரிகளுக்கு பாரிச நோய் வந்து விடுகிறது. தேவனின் மடியில் இயேசு இருக்கிறார் என்றும் உள்ளதே எனக் கூறுவது தான் இவர்களின் பதிலாக உள்ளது.
இவன் திருடி விட்டான் என்று நாம் குற்றம் சாட்டினால் இவன் கொலையு செய்துள்ளானே அதை ஏன் சொல்ல்விலை என்று கூறுவது போல் இந்த பதில் உள்ளது. ஒரு தந்தையின் மடியில் குழந்தை உள்ளது என்று கூறினாலும் தந்தை வேறு மகன் வேறு என்று தான் ஆகும். இருவரும் ஒருவர் என்ற அர்த்தம் வராது. இயேசு கடவுள் அல்ல என்று இவர்கள் இன்னொரு ஆதாரத்தை தருகிறார்கள். பைபிள் வசனங்கள் இவரக்ளின் குருட்டு நம்பிக்கைக்கு எதிராக இருக்கும் போதெல்லாம் இதற்கு ஆவிக்குரிய அர்த்தம் வேறு எனக் கூறி இஷ்டத்துக்கு உளறுவார்கள்.
இவன் சாப்பிட்டான் என்றால் சாப்பிட்டான் என்று தான் அர்த்தம் ஆனால் கள்லக் கிறித்தவ்ரகள் சாப்பிட்டான் என்றால் தூங்கினான் என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும் என்பார்கள்.
எனவே இவரகள் பாரிச நோய்க்கு ஆளாகியுள்ளனர் என்பது உறுதியாகிரது