பெண்கள், நாய், கழுதைக்கு சமமா?
கேள்வி
பின் வரும் ஹதீஸில் நபிகளார் பெண்களை நாய்க்கு ஒப்பிடுகின்றார்களா இதற்கு மறுப்பு என்ன ஆயிஷா(ரலி ஏன் அவ்வாறு கேட்டார்கள்
508. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(பெண்கள், நாய்கள், கழுதைகள் தொழுபவருக்குக் குறுக்கே சென்றால் தொழுகை முறிந்து விடும் என்று கூறுவதன் மூலம்) எங்களை நாய்களுக்கும் கழுதைகளுக்கும் சமமாக்கி விட்டீர்களே! நான் கட்டிலில் படுத்திருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் கட்டிலுக்கு நேராக நின்று தொழுவார்கள். அவர்களுக்கு நேராக நின்று தொழுவார்கள். அவர்களுக்கு நேராகக் கால்களை நீட்டுவது எனக்குப் பிடிக்காததால் கட்டிலின் கால்கள் வழியாக நழுவிக் சென்று விடுவேன்.
PJ அவர்களின் பதில்
கழுதைகள், நாய்கள் பெண்கள் ஆகியோர் தொழுபவருக்கு குறுக்கே சென்றால் தொழுபவரின் தொழுகை முறிந்து விடும் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியதாக சிலர் அறிவிப்பது பற்றி ஆயிஷா ரலி அவர்களிடம் கேட்டபோது மேற்கண்டவாறு கூறுகிறார்கள். நபிகள் பெண்களை நாய்க்கு ஒப்பிட்டு இருக்க மாட்டார்கள் என்று ஆயிஷா அவர்கள் மறுக்கிறார்கள். மேலும் நானே குறுக்கே படுத்திருக்கும் போது நபிய்வர்கள் தொழுதிருக்கிறார்கள். எனவே இது பொய்யான செய்தி என்று காரணத்துடன் மறுக்கிறார்கள். இதன் மூலம் நபியவர்கள் அப்படி சொல்லவில்லை என்று தான் ஆயிஷா ரலி வாதிடுகின்றனர் என்பது தெரிகின்றது,