கேள்வி
பைபிள் இறை வேதம் இல்லை என்று கூரி விட்டு பைபிளில் நபிகள் நாயகம் என்பது சரியா ?
PJ அவர்களின் பதில்
பைபிள் இறைவேதம் அல்ல என்று நாம் கூறுவது எந்த பொருளில் என்பதை நாமே விளக்கியுள்ளோம்.
அதாவது இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்ட வேதத்தில் சிலதை மறைத்து விட்டன. சிலதை மாற்றிவிட்டனர். சிலதை சேர்த்து விட்டனர். எவ்வாறு அறுளப்பட்டதோ அந்த தூய் வடிவில் இல்லை என்பதுதான் நமது வாதம். பெருமபாலான இறைவார்த்தைகள் நீக்கப்பட்ட பிறகும் நீக்காமல் விட்டு வைத்துள்ள வ்சனங்களில் ஒரே கடவுள் கொள்கையைச் சொல்லும் வச்ங்களும் நபிகள் நாயகம் குறித்த முன்னறிவிப்புகளும் இருக்க வாய்ப்புண்டு. அது போல் ஏதும் மீதமுள்ளதா என்று தேடிப்பார்த்த போது குர் ஆனுடன் ஒத்துப் போகின்ற விஷயங்களை எடுத்துக் காட்டி வாதிடுவது தவறில்லை. இப்படி வாதிடுவதால் பைபிளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று நாம் ஒப்புக் கொண்டஹாக ஆகாது மாற்றிய பிறகும் கூட அவர்களையும் அரியாமல் சில உண்மைகள் மிச்சமாக உள்ளன என்பது தான் இதிலிருந்து தெரியும் உண்மைஅயகும். |