பைபிளில் விதியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா?
கேள்வி
سلام عليكم ورحمت الله وبركاته
நான் ஐேர்மனில் இருந்து பைசல் அன்வாரி. என் கேள்வி. பைபில் களாகதுரை -விதியை- பற்றி ஏதும் சொல்கின்றதா தயவு செய்து விளக்கவும். என் கிறிஸ்துவ நண்பன் பைபில் விதியை பற்றி என்கும் சொல்ல வில்லை என்னும் போது என்னால் நன்ப முடிய வில்லை. பைபில் மூலமே பதில் கூற வேன்டும்.
PJ அவர்களின் பதில்
விதி உண்டு என்று கூறும் பைபிள் வசனங்கள்
வெளி 13 வது அதிகாரம் 8 வது வசனம்
8. உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்டஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில்பேரெழுதப்பட்டிராத பூமியின்குடிகள் யாவரும் அதைவணங்குவார்கள்.
வெளி 20 வத அதிகாரம் 12 வது வசனம்
12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும்தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள்திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொருபுஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப்புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள்தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
வெளி 20 வது அதிகாரம் 15 வது வசனம்
13. சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரைஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ளமரித்தோரை ஒப்புவித்தன. யாவரும்தங்கள் தங்கள் கிரியைகளின்படியேநியாயத்தீர்ப்படைந்தார்கள்.
14. அப்பொழுது மரணமும்பாதாளமும் அக்கினிக்கடலிலேதள்ளப்பட்டன. இதுஇரண்டாம் மரணம்.
15. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக்காணப்படாதவனெவனோ அவன்அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
வெளி 22 வது அதிகாரம் 19 வது வசனம்
18. இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசனவசனங்களைக் கேட்கிற யாவருக்கும்நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது:ஒருவன் இவைகளோடே எதையாகிலும்கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவாதைகளை தேவன் அவன்மேல்கூட்டுவார்.
19. ஒருவன் இந்தத் தீர்க்கதரிசனபுஸ்தகத்தின் வசனங்களிலிருந்துஎதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்தநகரத்திலிருந்தும் இந்தப்புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடையபங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
வெளி 21 வது அதிகாரம் 27 வது வசனம்
26. உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும்அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
27. தீட்டுள்ளதும் அருவருப்பையும்பொய்யையும் நடப்பிக்கிறதுமாகியஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின்ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள்மாத்திரம் அதில்பிரவேசிப்பார்கள்.
சங்கீதம் 139 வது அதிகாரம் 4 வது வசனம்
3. நான் நடந்தாலும் படுத்திருந்தாலும்என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.
4. என் நாவில் சொல்பிறவாததற்குமுன்னே,இதோ, கர்த்தாவே, அதையெல்லாம்நீர் அறிந்திருக்கிறீர்.
16. என் கருவை உம்முடையகண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதேஅவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும்நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.
உபாகமம் 31 வது அதிகாரம் 21 வது வசனம்
21. அநேக தீங்குகளும்இக்கட்டுகளும் அவர்களைத்தொடரும்போது, அவர்கள்சந்ததியாரின் வாயில்மறந்துபோகாதிருக்கும் இந்தப்பாட்டே அவர்களுக்கு விரோதமானசாட்சி பகரும்; நான் ஆணையிட்டுக்கொடுத்ததேசத்தில் அவர்களைப்பிரவேசிக்கப்பண்ணாதிருக்கிற இப்பொழுதேஅவர்கள் கொண்டிருக்கும்எண்ணம் இன்னது என்றுஅறிவேன் என்றார்.
1ம் பேதுரு 1 வது அதிகாரம் 2 வது வசனம்
2. பிதாவாகிய தேவனுடையமுன்னறிவின்படியே, ஆவியானவரின்பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடையஇரத்தந் தெளிக்கப்படுதலுக்கும்தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்குஎழுதுகிறதாவது: கிருபையும்சமாதானமும் உங்களுக்குப்பெருகக்கடவது.
மத்தேயு 10 வது அதிகாரம் 29லிருந்து 31 வரை
29. ஒரு காசுக்கு இரண்டுஅடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள்அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின்சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலேவிழாது.
30. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம்எண்ணப்பட்டிருக்கிறது.
31. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம்அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள்விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
எபேசியர் 1 வது அதிகாரம் 1 லிருந்து 23 வரை
1. தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடையஅப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்துஇயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்குஎழுதுகிறதாவது:
2. நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்,உங்களுக்குக் கிருபையும் சமாதானமும்உண்டாவதாக.
3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்பிதாவாகிய தேவனுக்குஸ்தோத்திரம்; அவர்கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலேஆவிக்குரிய சகலஆசீர்வாதத்தினாலும் நம்மைஆசீர்வதித்திருக்கிறார்.
4. தமக்குமுன்பாக நாம்அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும்குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள்நம்மைத் தெரிந்துகொண்டபடியே,
5. பிரியமானவருக்குள் தாம்நமக்குத் தந்தருளின தம்முடையகிருபையின் மகிமைக்குப்புகழ்ச்சியாக,
6. தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மைஇயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச்சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.
7. அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடையஇரத்தத்தினாலே பாவமன்னிப்பாகியமீட்பு இவருக்குள் நமக்குஉண்டாயிருக்கிறது.
8. அந்தக் கிருபையை அவர்சகல ஞானத்தோடும் புத்தியோடும்எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்.
9. காலங்கள் நிறைவேறும்போதுவிளங்கும் நியமத்தின்படிபரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகியசகலமும் கிறிஸ்துவுக்குள்ளேகூட்டப்படவேண்டுமென்று,
10. தமக்குள்ளே தீர்மானித்திருந்ததம்முடைய தயவுள்ள சித்தத்தின்இரகசியத்தை எங்களுக்குஅறிவித்தார்.
11. மேலும் கிறிஸ்துவின்மேல்முன்னே நம்பிக்கையாயிருந்தநாங்கள் அவருடைய மகிமைக்குப்புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு,
12. தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாகஎல்லாவற்றையும் நடப்பிக்கிறஅவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள்முன்குறிக்கப்பட்டு,கிறிஸ்துவுக்குள் அவருடையசுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.
13. நீங்களும் உங்கள்இரட்சிப்பின் சுவிசேஷமாகியசத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டபரிசுத்த ஆவியால் அவருக்குள்முத்திரைபோடப்பட்டீர்கள்.
14. அவருக்குச் சொந்தமானவர்கள்அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாகமீட்கப்படுவார்கள் என்பதற்குஆவியானவர் நம்முடையசுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.
15. ஆனபடியினாலே, கர்த்தராகிய இயேசுவின்மேலுள்ளஉங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுள்ளஉங்கள் அன்பையுங்குறித்துநான் கேள்விப்பட்டு,
16. இடைவிடாமல் உங்களுக்காகஸ்தோத்திரம்பண்ணி, என்ஜெபங்களில் உங்களைநினைத்து,
17. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்தேவனும் மகிமையின் பிதாவுமானவர்தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கானஞானத்தையும் தெளிவையும்அளிக்கிற ஆவியை உங்களுக்குத்தந்தருளவேண்டுமென்றும்,
18. தாம் நம்மை அழைத்ததினாலேநமக்கு உண்டாயிருக்கிறநம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில்தமக்கு உண்டாயிருக்கிறசுதந்தரத்தினுடைய மகிமையின்ஐசுவரியம் இன்னதென்றும்;
19. தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்துஎழுப்பி, அவரிடத்தில்நடப்பித்த தமதுபலத்த சத்துவத்தின் வல்லமைப்படியேவிசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலேகாண்பிக்கும் தம்முடையவல்லமையின் மகாமேன்மையான மகத்துவம்இன்னதென்றும், நீங்கள்அறியும்படிக்கு, அவர்உங்களுக்குப் பிரகாசமுள்ளமனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும்வேண்டிக்கொள்ளுகிறேன்.
20. எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்லமறுமையிலும் பேர்பெற்றிருக்கும்எல்லா நாமத்துக்கும் மேலாய்அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக,
21. அவரை உன்னதங்களில் தம்முடையவலதுபாரிசத்தில் உட்காரும்படிசெய்து,
22. எல்லாவற்றையும் அவருடையபாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,
23. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்நிரப்புகிறவருடைய நிறைவாகியசரீரமான சபைக்கு அவரைஎல்லாவற்றிற்கும் மேலானதலையாகத் தந்தருளினார்.
ரோமர் 8 வது அதிகாரம் 28 வது வசனம்
28. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படிஅழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச்சகலமும் நன்மைக்கு ஏதுவாகநடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 9 வது அதிகாரம் 1 லிருந்த 33 வரை
1. எனக்கு மிகுந்ததுக்கமும் இடைவிடாத மனவேதனையும்உண்டாயிருக்கிறது;
2. நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச்சொல்லுகிறேன் என்று பரிசுத்தஆவிக்குள் என் மனச்சாட்சியும்எனக்குச் சாட்சியாயிருக்கிறது.
3. மாம்சத்தின்படி என்இனத்தாராகிய என்சகோதரருக்குப் பதிலாகநானே கிறிஸ்துவைவிட்டுச்சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே.
4. அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும்அவர்களுடையவைகளே;
5. பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படிகிறிஸ்துவும் அவர்களில்பிறந்தாரே, இவர்என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டசர்வத்திற்கும்மேலான தேவன்.ஆமென்.
6. தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்றுசொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல்வம்சத்தார் எல்லாரும்இஸ்ரவேலரல்லவே.
7. அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும்எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில்உன் சந்ததி விளங்குமென்றுசொல்லியிருக்கிறதே.
8. அதெப்படியென்றால், மாம்சத்தின்படிபிள்ளைகளானவர்கள் தேவனுடையபிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படிபிள்ளைகளானவர்களே அந்தச்சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்.
9. அந்த வாக்குத்தத்தமானவார்த்தையாவது: குறித்தகாலத்திலே வருவேன், அப்பொழுதுசாராள் ஒரு குமாரனைப்பெறுவாள் என்பதே.
10. இதுவுமல்லாமல், நம்முடையபிதாவாகிய ஈசாக்குஎன்னும் ஒருவனாலே ரெபெக்காள்கர்ப்பவதியானபோது,
11. பிள்ளைகள் இன்னும்பிறவாமலும், நல்வினைதீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடையதெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடையதீர்மானம் கிரியைகளினாலேநிலைநிற்காமல் அழைக்கிறவராலேநிலைநிற்கும்படிக்கு,
12. மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான்என்று அவளுடனே சொல்லப்பட்டது.
13. அப்படியே, யாக்கோபைச்சிநேகித்து, ஏசாவைவெறுத்தேன் என்றும்எழுதியிருக்கிறது.
14. ஆகையால் நாம் என்னசொல்லுவோம்? தேவனிடத்திலேஅநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.
15. அவர் மோசேயை நோக்கி:எவன்மேல் இரக்கமாயிருக்கச்சித்தமாயிருப்பேனோ அவன்மேல்இரக்கமாயிருப்பேன்,எவன்மேல் உருக்கமாயிருக்கச்சித்தமாயிருப்பேனோ அவன்மேல்உருக்கமாயிருப்பேன் என்றார்.
16. ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும்அல்ல, இரங்குகிறதேவனாலேயாம்.
17. மேலும் என்னுடைய வல்லமையைஉன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடையநாமம் பூமியில் எங்கும்பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன்என்று பார்வோனுடனே சொன்னதாகவேதத்தில் சொல்லியிருக்கிறது.
18. ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச்சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல்இரக்கமாயிருக்கிறார்,எவனைக் கடினப்படுத்தச்சித்தமாயிருக்கிறாரோ அவனைக்கடினப்படுத்துகிறார்.
19. இப்படியானால், அவர்இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்? அவர்சித்தத்திற்கு எதிர்த்துநிற்பவன்யார்? என்றுஎன்னுடனே சொல்லுவாய்.
20. அப்படியானால், மனுஷனே, தேவனோடுஎதிர்த்துத் தர்க்கிக்கிறநீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்துஉருவாக்கினவனை நோக்கி:நீ என்னை ஏன்இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?
21. மிதியிட்ட ஒரேகளிமண்ணினாலே குயவன்ஒரு பாத்திரத்தைக் கனமானகாரியத்துக்கும், ஒருபாத்திரத்தைக் கனவீனமானகாரியத்துக்கும் பண்ணுகிறதற்குமண்ணின்மேல் அவனுக்குஅதிகாரம் இல்லையோ?
22. தேவன் தமது கோபத்தைக்காண்பிக்கவும், தமதுவல்லமையைத் தெரிவிக்கவும்,
23. தாம் மகிமைக்காக எத்தனமாக்கினகிருபாபாத்திரங்கள்மேல் தம்முடையமகிமையின் ஐசுவரியத்தைத்தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்குஎத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப்பாத்திரங்கள்மேல் மிகவும்நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால்உனக்கென்ன?
24. அவர் யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்துநம்மை அழைத்திருக்கிறாரே.
25. அந்தப்படி: எனக்குஜனங்களல்லாதவர்களை என்னுடையஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச்சிநேகிக்கப்பட்டவள் என்றும்சொல்லி அழைப்பேன்.
26. நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்றுஅவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலேஅவர்கள் ஜீவனுள்ள தேவனுடையபிள்ளைகள் என்னப்படுவார்கள்என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில்சொல்லியிருக்கிறது.
27. அல்லாமலும் இஸ்ரவேல்புத்திரருடைய இலக்கம்சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள்மாத்திரம் இரட்சிக்கப்படுவார்களென்றும்;
28. அவர் நீதியோடே சீக்கிரமாய்த்தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலேசீக்கிரமாகவே காரியத்தைநிறைவேற்றி முடிப்பார்என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச்சொல்லுகிறான்.
29. அல்லாமலும் ஏசாயாமுன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளேஒரு சந்ததியை மீதியாகவைக்காதிருந்தாரானால் நாம்சோதோமைப்போலாகி கொமோராவுக்குஒத்திருப்போம்.
30. இப்படியிருக்க நாம்என்னசொல்லுவோம்? நீதியைத்தேடாத புறஜாதியார் நீதியைஅடைந்தார்கள்; அதுவிசுவாசத்தினாலாகும் நீதியே.
31. நீதிப்பிரமாணத்தைத் தேடினஇஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தைஅடையவில்லை.
32. என்னத்தினாலென்றால்,அவர்கள் விசுவாசத்தினாலேஅதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேதேடினபடியால் அதைஅடையவில்லை; இடறுதற்கானகல்லில் இடறினார்கள்.
33. இதோ, இடறுதற்கானகல்லையும், தவறுதற்கானகன்மலையையும், சீயோனில்வைக்கிறேன்; அவரிடத்தில்விசுவாசமாயிருப்பவன் எவனோஅவன் வெட்கப்படுவதில்லைஎன்று எழுதியிருக்கிறபடியாயிற்று.
அப்போஸ்தலர் 4 வது அதிகாரம் 28 வது வசனம்
28. ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல்ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடையபரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்குவிரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.
யோவான் 12 வது அதிகாரம் 32 வது வசனம்
32. நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில்இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.
யோவான் 6 வது அதிகாரம் 44 வது வசனம்
44. என்னை அனுப்பின பிதாஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில்வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனைஎழுப்புவேன்.
யோவான் 5 வது அதிகாரம் 24 வது வசனம்
24. என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரைவிசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவேமெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 1 வது அதிகாரம் 12 வது வசனம்
12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய்அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும்தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
2 ம் பேதுரு 3 வது அதிகாரம் 9 வது வசனம்
9. தாமதிக்கிறார் என்றுசிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமதுவாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும்கெட்டுப்போகாமல் எல்லாரும்மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல்நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
1 ம் பேதுரு 1 வது அதிகாரம் 1 லிருந்து 25 வரை
1. இயேசுகிறிஸ்துவின்அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியாதேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில்,
2. பிதாவாகிய தேவனுடையமுன்னறிவின்படியே, ஆவியானவரின்பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடையஇரத்தந் தெளிக்கப்படுதலுக்கும்தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்குஎழுதுகிறதாவது: கிருபையும்சமாதானமும் உங்களுக்குப்பெருகக்கடவது.
3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்பிதாவாகிய தேவனுக்குஸ்தோத்திரம் உண்டாவதாக;
4. அவர், இயேசுகிறிஸ்துமரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும்மாசற்றதும் வாடாததுமாகியசுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கைஉண்டாகும்படி, தமதுமிகுந்த இரக்கத்தின்படியேநம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.
5. கடைசிக்காலத்திலே வெளிப்படஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்குஏதுவாக விசுவாசத்தைக் கொண்டுதேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிறஉங்களுக்கு அந்தச்சுதந்தரம் பரலோகத்தில்வைக்கப்பட்டிருக்கிறது.
6. இதிலே நீங்கள் மிகவும்சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுதுகொஞ்சக்காலம் பலவிதமானசோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.
7. அழிந்துபோகிற பொன்அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும்அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிறஉங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்துவெளிப்படும்போது உங்களுக்குப்புகழ்ச்சியும் கனமும்மகிமையுமுண்டாகக் காணப்படும்.
8. அவரை நீங்கள் காணாமலிருந்தும்அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுதுஅவரைத் தரிசியாமலிருந்தும்அவரிடத்தில் விசுவாசம்வைத்து, சொல்லிமுடியாததும்மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிறசந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து,
9. உங்கள் விசுவாசத்தின் பலனாகியஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்.
10. உங்களுக்கு உண்டானகிருபையைக் குறித்துத்தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள்இந்த இரட்சிப்பைக்குறித்துக்கருத்தாய் ஆராய்ந்துபரிசோதனைபண்ணினார்கள்;
11. தங்களிலுள்ள கிறிஸ்துவின்ஆவியானவர் கிறிஸ்துவுக்குஉண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப்பின்வரும் மகிமைகளையும்முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக்குறித்தாரென்பதையும்,அந்தக் காலத்தின் விசேஷம்இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.
12. தங்கள்நிமித்தமல்ல,நமதுநிமித்தமே இவைகளைத்தெரிவித்தார்களென்று அவர்களுக்குவெளியாக்கப்பட்டது,பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்டபரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச்சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டுஇவைகள் இப்பொழுது உங்களுக்குஅறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளைஉற்றுப்பார்க்க தேவதூதரும்ஆசையாயிருக்கிறார்கள்.
13. ஆகையால், நீங்கள்உங்கள் மனதின் அரையைக்கட்டிக்கொண்டு, தெளிந்தபுத்தியுள்ளவர்களாயிருந்து, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போதுஉங்களுக்கு அளிக்கப்படுங்கிருபையின்மேல் பூரணநம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.
14. நீங்கள் முன்னே உங்கள்அறியாமையினாலே கொண்டிருந்தஇச்சைகளின்படி இனிநடவாமல், கீழ்ப்படிகிறபிள்ளைகளாயிருந்து,
15. உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும்உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும்பரிசுத்தராயிருங்கள்.
16. நான் பரிசுத்தர், ஆகையால்நீங்களும் பரிசுத்தராயிருங்கள்என்று எழுதியிருக்கிறதே.
17. அன்றியும், பட்சபாதமில்லாமல்அவனவனுடைய கிரியைகளின்படிநியாயந்தீர்க்கிறவரை நீங்கள்பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கேபரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும்பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.
18. உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய்நீங்கள் அநுசரித்து வந்தவீணான நடத்தையினின்றுஅழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும்பொன்னினாலும் மீட்கப்படாமல்,
19. குற்றமில்லாத மாசற்றஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின்விலையேறப்பெற்ற இரத்தத்தினாலேமீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
20. அவர் உலகத்தோற்றத்திற்குமுன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமதுமூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிறஉங்களுக்காக இந்தக்கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.
21. உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும்தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்துஎழுப்பி, அவருக்குமகிமையைக் கொடுத்தார்.
22. ஆகையால் நீங்கள் மாயமற்றசகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலேசத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள்ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்தஇருதயத்தோடே ஒருவரிலொருவர்ஊக்கமாய் அன்புகூருங்கள்;
23. அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும்நிற்கிறதும் ஜீவனுள்ளதுமானதேவவசனமாகிய அழிவில்லாதவித்தினாலே மறுபடியும்ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.
24. மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடையமகிமையெல்லாம் புல்லின்பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின்பூவும் உதிர்ந்தது.
25. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும்நிலைத்திருக்கும்; உங்களுக்குச்சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறவசனம் இதுவே.
1 ம் கொரிந்திரியர் 2 வது அதிகாரம் 7 வது வசனம்
7. உலகத்தோற்றத்திற்கு முன்னேதேவன் நம்முடைய மகிமைக்காகஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்தஇரகசியமான தேவஞானத்தையேபேசுகிறோம்.