விக்ரக வழிபாட்டை அவமதிப்பது எந்த விதத்தில் நியாயம்?
கேள்வி
விக்ரக வழிபாட்டை அவமதிப்பது எந்த விதத்தில் நியாயம்?பதில் தெளிவாக புரியும்படி சொல்லுங்க.
PJ அவர்களின் பதில்
கடவுளை மடும் தான் வழிபடவேண்டும். விக்கிரகம் என்பது நம்மால் செய்யப்பட்டது. அது கடவுள் அல்ல. அது நம்மைவிட எல்லா விதத்திலும் தாழ்ந்ததாகும். நம்மை விட தாழ்ந்ததை வழிபடுவதும்வணங்குவதும் அறியாமை அல்லவா?
பெரிய கோடிஸ்வரன் ஒருபிச்சைக்காரணுக்கு முன்னால் கைகட்டி நிற்பதில்லை. அதிகாரத்தில் இருப்பவன்அப்பாவிகள் முன்னால் மண்டியிடுவதில்லை. தன்னை விட தாழ்ந்தவனுக்கு பணியக் கூடாதுஎன்று உள்ளுணர்வு சொல்வது தான் இதற்குக் காரணம். கோடீஸ்வரனுக்கும் பிச்சைக்காரனுக்கும்இடையே உள்ள வேறுபாட்டை விட விக்கிரகத்துக்கும் மனிதனுக்கும் இடையே அதிக வேறுபாடுஉள்ளது என்பது ஏன் மனிதனுக்கு புரியவில்லை?
கடவுளைத் தான் விக்கிரகவடிவில் பார்க்கிறோம் என்று கூறுவதும் பொருளற்றதாக உள்ளது. கடவுளைப் பார்த்தால்தான் அவரது உருவத்தை வரையவோ செதுக்கவோ முடியும். கடவுளை யாரும் பார்க்கவில்லைஎனும் போது நாம் செதுக்கிக் கொண்ட சிலை எப்படி கடவுளின் உருவமாக இருக்க முடியும்?
கடவுளை நாம் பார்த்தால்கூட அவரைப் போல் செதுக்கப்பட்ட்து எப்படி அவராக முடியும்? ஒரு தலைவரை நாம்விருந்துக்கு அழைப்பதற்கு பதிலாக சாப்பாட்டின் முன்னால் அவரது சிலையை வைத்துசாப்பிடச் சொல்வோமா? அவரைப் போல் அது இருந்தால் கூட அது எப்படி அவராக முடியும்?
ஒரு பெண்ணுக்கு கணவன்எல்லாவித வசதிகளையும் இன்பங்களையும் வழங்கும் போது அந்த இட்த்தில் யாரையாவதுஅந்தப் பெண் வைத்தால் அதை அவனால் ஏற்க முடியாது. அகில உலகையும் படைத்த இறைவன்இட்த்தில் ஒரு கல்லை வைத்து அது தான் கடவுள் என்றால் படைத்தவனுக்கு எவ்வளவு கோபம்வரும்?
இப்படி சிந்தித்துப்பாருங்கள். சிலை வணக்கம் எவ்வளவு அவமானமானது என்பது விளங்கும்