ஸமூது சமூகத்தினர் அழிக்கப்பட்ட வரலாற்றில் முரண்பாடு ஏன்?
கேள்வி
ஸமூது சமூகத்தினர் அழிக்கப்பட்ட வரலாற்றை கூறும் குர்ஆன் 7:78 என்ற வசனத்தில் பூகம்பம் என்றும் மற்றவசனங்களில் இடிமுழக்கம் பெரும் சப்தம் என்று வருகிறது ஏன் இந்த வேறுபாடு என்று கிறிஸ்தவ சகோதர்கள் முகநூலில் கேட்டு குர்ஆன் ஒன்றுகொன்று முரண்படுகிறது என்று பரப்புகின்றனர். இது பற்றி விளக்கம் அளியுங்கள்
PJ அவர்களின் பதில்
கிறித்தவர்களின் வேத நூலுக்கு நாம் எழுப்பும் கேள்விகள் எவ்வளவு பாரதூரமாக உள்ளன என்பதையும் அவர்கள் குர் ஆனுக்கு எதிராக கேட்கும் கேள்விகள் எவ்வளவு அபத்தமாக உள்ளன என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.
இப்படியெல்லாம் அறிவுடைய மக்கள் கேடபார்களா?
ஒரு நேரத்தில் இடி இடித்து புயல் அடித்து பெருமழை பெய்து வெள்ளமும் ஏற்பட்டு பூகம்பமும் ஏற்படுகிறது என்றால் இதில் எந்த ஒன்றைச் சொன்னாலும் அது தவறாக ஆகாது.
பூகம்பம் ஏற்பட்டது என்றாலும் அது உண்மை தான். பெருவெள்ளம் ஏற்பட்டது என்று சொன்னாலும் அதுவும் உண்மை தான். மழைபெய்தது என்று சொன்னாலும் அதுவும் உண்மை தான். ஒவ்வொரு நேரத்தில் ஒன்றைச் சொன்னாலும் அனைத்துமே உண்மைதான்.
பெரும் சப்தமும் ஏற்பட்டு பூகம்பமும் ஏற்பட்டால் இரண்டையும் சொல்லலாம். இரண்டில் ஒன்றை சொல்லலாம். எதுவும் தவறில்லை.
பூகம்பம் ஏற்பட்டது என்று ஒரு வசனத்திலும் பூகம்பம் ஏற்படவில்லை என்று ப்வேரூ வசனத்திலும் சொன்னால் அதுதான் முரண்பாடு. இது போன்ற முரண்பாடுகள் பைபிளில் கணக்கின்றி காணப்படுகின்றன. குரானில் இப்படி எதுவுமே இல்லை