விவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு

விவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு:
கடந்த 2015 ஆம் ஆண்டு மொத்தம் 7 தலைப்புகளில் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாத ஒப்பந்தம் போட்ட கிறித்தவ போதகர் கூட்டம் முதல் தலைப்போடு ஓட்டமெடுத்துவிட்டனர்.
நவம்பர் 5 – 2015 ஆம் ஆண்டு முதல் தலைப்பிலான விவாதம் முடிந்து டிசம்பர் 2 ஆம் தேதி – 2015 ஆம் ஆண்டு அடுத்த தலைப்பில் விவாதிக்க வாருங்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத் அவர்களை விவாதிக்க அழைத்தது.
விவாதத்திற்கு தலைமையேற்ற போதகர் பவுலி அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்துடன் முதல் விவாதம் செய்த பிறகு தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், தனது உடல்நலம் சரியான பிறகு விவாதம் செய்ய வருவதாகவும் சொல்லிவிட்டார். அவரோடு வந்த சுதாகர் கண்ணன் உள்ளிட்ட கிறித்தவ போதகர் குழுவும் அத்தோடு தலைமறைவாகிவிட்டது. கிறித்தவ தரப்பினர் ஓட்டமெடுத்ததால் விவாதம் நடைபெறாமல் இன்று வரை நிலுவையில் உள்ளது.
நமது அறைகூவலுக்கு பதிலளிக்க முடியாமல் ஓட்டமெடுத்த போதகர்கள் தற்போது நாம் தான் விவாதத்திலிருந்து பின் வாங்கி ஓடிவிட்டதாக அவதூறு பரப்பி வருகின்றனர்.
ஓட்டமெடுத்தது அவர்கள் தான்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் 29.08.15 சனிக்கிழமை அன்று டிஎன்டிஜேவிற்கும் தி இண்டியன் பெண்டிகொஸ்டல் சர்ச் ஆஃப் தி காட் சபையினருக்கும் இடையே கீழ்கண்டவாறு விவாத ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த விவாத ஒப்பந்தத்தின் முழு விபரம்:
விவாத ஒப்பந்தம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் 29.08.15 சனிக்கிழமை அன்று டிஎன்டிஜேவிற்கும் தி இண்டியன் பெண்டிகொஸ்டல் சர்ச் ஆஃப் தி காட் சபையினருக்கும் இடையே கீழ்கண்டவாறு விவாத ஒப்பந்தம் செய்யப்பட்டது.
விவாதத்தின் தலைப்புகள் :
முதல் தலைப்பு:
1. குர்ஆன் இறைவேதமா? (நாள் : நவம்பர் 4 புதன் கிழமை – 2015)
திருக்குர்ஆன் இறைவனுடைய வேதமே! என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு.
குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் குர்ஆன் இறைவேதமில்லை என்பது IPC யின் நிலைப்பாடு.
2. பைபிள் இறைவேதமா? (நாள்: நவம்பர் 5 வியாழக்கிழமை – 2015)
பரிசுத்த பைபிள் இறைவேதமே! என்பது IPC யின் நிலைப்பாடு.
பைபிள் இறைவேதமே அல்ல என்பது டிஎன்டிஜேயின் நிலைப்பாடு.
இரண்டாம் தலைப்பு:
முதலில் விவாதிப்பது: ( நாள்: டிசம்பர் 2 – 2015)
1.பைபிள் கூறும் இறைவன் மெய்யான இறைவனா?:
பைபிள் கூறும் இறைவனே மெய்யான இறைவன் என்பது IPC யின் நிலைப்பாடு
பைபிள் கூறும் இறைவன் மெய்யான இறைவன் இல்லை என்பது டிஎன்டிஜேயின் நிலைப்பாடு.
2.குர்ஆன் ஹதீஸ் அறிவிக்கும் அல்லாஹ் மெய்யான இறைவனா?:
(நாள்: டிசம்பர் 3 – 2015)
குர்ஆன் ஹதீஸ் அறிவிக்கும் அல்லாஹ்வே மெய்யான இறைவன் என்பது டிஎன்டிஜேயின் நிலைப்பாடு.
குர்ஆன் ஹதீஸ் அறிவிக்கும் அல்லாஹ் மெய்யான இறைவன் இல்லை என்பது IPC யின் நிலைப்பாடு.
மூன்றாம் தலைப்பு: ( நாள் : ஜனவரி 6 – 2016)
பாவமும் அதன் பரிகாரமும் பற்றி குர்ஆன் ஹதீஸ் கூறுவது சரியானதா?:
பாவமும், அதன் பரிகாரமும் பற்றி குர்ஆன் ஹதீஸ் கூறுவதே சரியானது என்பது டிஎன்டிஜேயின் நிலைப்பாடு.
பாவமும், அதன் பரிகாரமும் பற்றி குர்ஆன் ஹதீஸ் கூறுவது முற்றிலும் தவறானது என்பது IPC யின் நிலைப்பாடு.
பாவமும் அதன் பரிகாரமும் பற்றி பைபிள் கூறுவது சரியானதா?:
( நாள் : ஜனவரி 7 – 2016)
பாவமும் அதன் பரிகாரமும் பற்றி பைபிள் கூறுவதே சரியானது என்பது IPC யின் நிலைப்பாடு..
பாவமும் அதன் பரிகாரமும் பற்றி பைபிள் கூறுவது முற்றிலும் தவறானது என்பது டிஎன்டிஜேயின் நிலைப்பாடு.
நான்காம் தலைப்பு: ( நாள் : பிப்ரவரி 17 – 2016)
மனுகுலம் பின்பற்றத்தக்கதும் நேர்மையானதுமான நீதி நெறிகளை பைபிள் போதிக்கின்றதா?:
மனுகுலம் பின்பற்றத்தக்கதும் நேர்மையானதுமான நீதி நெறிகளை பைபிள் போதிக்கின்றதே சரியானது என்பது IPC யின் நிலைப்பாடு.
பைபிள் போதிக்கும் நீதிநெறிகள் நேர்மையானதுமல்ல; மனுகுலம் பின்பற்றத்தக்கதுமல்ல என்பது டிஎன்டிஜேயின் நிலைப்பாடு.
மனுகுலம் பின்பற்றத்தக்கதும் நேர்மையானதுமான நீதி நெறிகளை குர்ஆன் ஹதீஸ் போதிக்கின்றதா?:
( நாள் : பிப்ரவரி 18 – 2016)
மனுகுலம் பின்பற்றத்தக்கதும் நேர்மையானதுமான நீதி நெறிகளை குர்ஆன் ஹதீஸே போதிக்கின்றது என்பது டிஎன்டிஜேயின் நிலைப்பாடு.
குர்ஆன் ஹதீஸ் போதிக்கும் நீதி நெறிகள் மனுகுலம் பின்பற்றக்கூடியதும் இல்லை; நேர்மையானதுமில்லை என்பது IPC யின் நிலைப்பாடு.
ஐந்தாம் தலைப்பு: ( நாள் : மார்ச் 2 – 2016)
முஹம்மது அவர்கள் மனுகுலத்திற்கு முன்மாதிரியாக வாழ்ந்து போதனை செய்தாரா?:
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான் முழு மனிதகுலத்திற்கும் முன்மாதிரியாக வாழ்ந்து போதனை செய்தவர்கள் என்பது டிஎன்டிஜேயின் நிலைப்பாடு.
முஹம்மது அவர்கள் மனுகுலத்திற்கு முன்மாதிரியாக போதிக்கவுமில்லை; வாழவுமில்லை என்பது IPC யின் நிலைப்பாடு.
இயேசு அவர்கள் மனுகுலத்திற்கு முன்மாதிரியாக வாழ்ந்து போதனை செய்தாரா?: ( நாள் : மார்ச் 3 – 2016)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே மனுகுலத்திற்கு முன்மாதிரியாக வாழ்ந்து போதனை செய்தார் என்பது IPC யின் நிலைப்பாடு.
இயேசுவிடம் மனுகுலத்திற்கு ஏற்ற எந்த போதனையும் இல்லை; முன்மாதிரியும் இல்லை என்பது டிஎன்டிஜேவின் நிலைப்பாடு.
ஆறாம் தலைப்பு: ( நாள் : மார்ச் 30 – 2016)
நித்திய ஜீவனுக்குரிய வாழ்க்கைக்கு உறுதியான நம்பிக்கையை பைபிள் அளிக்கின்றதா?:
மனுகுலத்தின் நித்திய ஜீவனுக்குரிய வாழ்க்கைக்கு உறுதியான நம்பிக்கையை பைபிள்தான் அளிக்கின்றது என்பது IPC யின் நிலைப்பாடு.
மனுகுலம் நித்திய ஜீவனுக்குரிய வாழ்வை அடைவதற்கு பைபிள் எவ்வித நம்பிக்கையும் அளிக்கவில்லை என்பது டிஎன்டிஜேயின் நிலைப்பாடு.
நித்திய ஜீவனுக்குரிய வாழ்க்கைக்கு உறுதியான நம்பிக்கையை குர்ஆன் ஹதீஸ் அளிக்கின்றதா?:
( நாள் : மார்ச் 31 – 2016)
மனுகுலம் நித்திய ஜீவனுக்குரிய வாழ்வை அடைவதற்கு குர்ஆனும் ஹதீஸூம் தான் உறுதியான நம்பிக்கையை அளிக்கின்றது என்பது டிஎன்டிஜேயின் நிலைப்பாடு.
மனுகுலத்திற்கு நித்திய ஜீவனுக்குரிய வாழ்வை அடைவதற்கு குர்ஆனும் ஹதீஸும் எந்தவொரு நம்பிக்கையும் அளிக்கவில்லை என்பது IPC யின் நிலைப்பாடு.
ஏழாவது தலைப்பு: ( நாள் : ஏப்ரல் 20 – 2016)
இயேசு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர் தெழுந்தாரா?:
ஆண்டவர் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது பைபிளின் அடிப்படையில் IPC யின் நிலைப்பாடு.
இயேசு சிலுவையில் அறையப்படவுமில்லை; சிலுவையில் மரிக்கவுமில்லை; உயிர்த்தெழுந்தார் என்பதும் பொய் என்பது டிஎன்டிஜேயின் நிலைப்பாடு.
நேர் இணை தலைப்பு: ( நாள் : ஏப்ரல் 21 – 2016)
இந்த தலைப்பிற்கு நேர் இணையான ஒரு தலைப்பை IPC தரப்பு செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் ஈமெயில் மூலம் தெரிவிப்பார்கள். அவ்வாறு தெரிவிக்கக்கூடிய தலைப்பு நேரிணையாக இல்லாமல் இருந்தால் IPC தெரிவிக்கும் தலைப்போடு அதற்கு இணையான ஒரு தலைப்பு டிஎன்டிஜே சார்பில் இணைக்கப்பட்டு ஒரே தலைப்பாக அது மறுநாள் விவாதிக்கப்படும்.
4. விவாத இடம் : முதல் தலைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொறுப்பிலுள்ள ஒரு இடத்தில் நடைபெறும். மற்ற தலைப்புகளிலான விவாதத்தை தவ்ஹீத் ஜமாஅத்தின் பொறுப்பிலுள்ள இடத்தில் நடத்துவது குறித்து IPC தரப்பு முதல் விவாதத்தின் இறுதியில் அறிவிப்பார்கள்.
—————————————–
மேற்கண்டவாறு ஏழு தலைப்புகளில் விவாத ஒப்பந்தம் போட்ட நிலையில் முதல் விவாதம் முடிந்ததும் தனக்கு ஹார்ட் அட்டாக் வந்ததாகச் சொன்னவர்கள் அடுத்த விவாதத்திற்கு வராமல் ஓட்டமெடுத்தனர்.
இன்னும் மீதம் 6 தலைப்புகள் விவாதிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
ஏற்கனவே போடப்பட்ட விவாத ஒப்பந்தம் இன்றைய நாள் வரை நிலுவையில் உள்ளது.
எனவே மீதத்தலைப்புகளில் விவாதிக்க தவ்ஹீத் ஜமாஅத் தயாராக உள்ளது.
எந்த தேதியில் விவாதம் வைத்துக் கொள்ளலாம் என்பதை பவுலி மற்றும் சுதாகர் கண்னன் உள்ளிட்ட கிறித்தவ போதகர் குழுவினரை நேரில் பார்ப்பவர்கள் அவர்களிடமே கேட்டு எழுத்துப்பூர்வமாக கடிதமாக வாங்கி தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமைக்கு அனுப்பினால் மீத தலைப்புகளிலுள்ள விவாதங்களையும் தொடர ஏதுவாக இருக்கும். தவ்ஹீத் ஜமாஅத் விவாதத்திலிருந்து பின் வாங்கி ஓடிவிட்டதாக அவதூறு பரப்பும் கிறித்தவ போதகர்களுக்கு இதையே பதிலாகச் சொல்லிக் கொள்கின்றோம்.
குறிப்பு:
இதைப்படித்துவிட்டு பவுலி மற்றும் சுதாகர் கண்னன் உள்ளிட்ட கிறித்தவ போதகர்களுக்கு மறுபடியும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பல்ல.
அடுத்த விவாதத்திற்கு விவாதிக்க வாருங்கள் என தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் இ.ஃபாரூக் அவர்கள் 23.11.15 அன்று போதகர் பவுலி அவர்களை அழைத்த போது அவர் தனக்கு ஹார்ட் அட்டாக் வந்ததாகச் சொன்ன தொலைபேசி உரையாடல் ஆடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் குறித்த போதிய அறிவில்லாத நபர்களிடத்தில் தான் இந்த கிறித்தவ போதகர்கள் விவாதம் என்ற பெயரில் வாய்ச்சவடால் விடுகின்றனர்; இஸ்லாம் குறித்த எந்த குற்றச்சாட்டுகளாக இருந்தாலும், எப்படிப்பட்ட கேள்விகளாக இருந்தாலும் எங்களிடம் விவாதித்து கேட்க வாருங்கள் என்று பகிரங்க அறைகூவல் விடும் தவ்ஹீத் ஜமாஅத்தைப் பார்த்து இவர்கள் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டமெடுக்கின்றார்கள்; எனவே இத்தகைய அவதூறுப்பேர்வழிகளைக் காண்போர் தவ்ஹீத் ஜமாஅத்திடம் இவர்களை விவாதிக்க அழைத்து வரும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு,
எம்.எஸ்.சையது இப்ராஹீம்
TNTJ பொதுச்செயலாளர்