Menu

சவுந்தர்யம்
மஹா சவுந்தர்யமுள்ளவர் யார்?

Asathala azhagu-500x500_0

பழைய ஏற்பாட்டில் சங்கீதம் என்ற ஆகமம், இடம் பெற்றுள்ளது. இது தாவீது(தாவூது) ராஜாவின் வேதமாகும். இந்தவேதத்தில் தாவீது ராஜா எதிர்காலத்தில்தோன்றக் கூடிய ஒரு தீர்க்கதரிசியைக் குறித்து முன் அறிவிப்புச் செய்கிறார்.

அது இயேசுவின் வருகை குறித்து தாவீது செய்த முன்னறிவிப்பு என்றுகிறித்தவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.அந்த முன்னறிவிப்பில், வரக்கூடியதீர்க்கதரிசிக்குரி ஏராளமான பிரத்தியோகமான அடையாளங்களை தாவீதுராஜாகூறுகிறார்.

இந்த அடையாளங்களில் ஒன்றிரண்டு அடையாளங்கள் மட்டுமே இயேசுவுக்குப்பொருந்துகின்றன. சொல்லப்பட்டஅத்தனை அடையாளங்களும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கே சரியாகப் பொருந்துகின்றன. அனைத்துஅடையாளங்களும்யாருக்குப் பொருந்துகின்றனவோ அவரைப் பற்றிய முன்னறிவிப்பு என்று தான்அறிவுடையோர் முடிவுக்கு வருவார்கள்.

எதிர்காலத்தில் தோன்றக் கூடிய அந்த தீர்க்கதரிசியை மானசீகமாக நோக்கி தாவீதுராஜா நேரடியாகப் பேசுவதுபோல் அந்த முன்னறிவிப்பு அமைந்துள்ளது.

என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது. நான் ராஜாவைக் குறித்துப்பாடின கவிதையைச்சொல்லுகிறேன். என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடையஎழுத்தாணி.

(சங்கீதம் 45:1)

முன்னறிவிப்பில் எடுத்த எடுப்பிலேயே கிறிஸ்தவர்களின் தவறான நம்பிக்கையைதாவீது ராஜா நீக்குகிறார்.வரக்கூடியவர் ராஜாவாக அரசராக இருப்பார். என்றுதாவீது ராஜா கூறுகிறார். இயேசு ஒரு காலத்திலும் மக்களைஆட்சி செய்யும்அரசராக இருந்ததில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரசராக ஆட்சிபுரிந்திருக்கறார்கள்.

எல்லா மனு புத்திரரிலும் நீர் மகா சௌந்தர்யமுள்ளவர். உம்முடையஉதடுகளில் அருள் பொழிகிறது. ஆகையால்தேவன் உம்மை என்றைக்கும்ஆசீ்ர்வதிக்கின்றார்

(சங்கீதம் 45:2)

வரக்கூடியவர் மிகவும் அழகுடையவராக இருப்பார் என்று தாவீது ராஜா கூறுகிறார்.இயேசு அழகுடையவராகஇருந்தார் என்று பைபிள் எந்த இடத்திலும் கூறவில்லை.மாறாக அழகற்றவராக இருந்தார் என்று கூறுகிறது.

அவருக்கு அழகுமில்லை, சௌந்தர்யமும் இல்லை. அவரைப் பார்க்கும் போதுநாம் அவரை விரும்பத்தக்க ரூபம்அவருக்கு இல்லாதிருந்தது.

(ஏசாயா 53:2)

அவருக்கு அழகுமில்லைஎன்று ஏசாயா ஆகாமம் கூறுகிறது. இது இயேசுவைப்பற்றிய முன்னறிவிப்பு எனக்கிறித்தவ அறிஞர்கள் கூறுகின்றனர். இது இயேசுவைக்குறித்த முன்னறிவிப்பு என்பதை ஏற்றுக் கொள்வோம்.ஆனால் தாவீது ராஜாகூறுவது நிச்சயம் இயேசுவைக் குறிக்காது என்பதை கிறித்தவர்கள் ஒப்புக்கொண்டாகவேண்டும்.

ஏனெனில் தாவீதின் முன்னறிவிப்பு அழகுள்ள ஒரு தீர்க்கதரிசியைப் பற்றிக்குறிப்பிடுகின்றது. அழகற்றவராகஇருப்பார் என்பதும் மிகவும் அழகுடையவராகஇருப்பார் என்பதும் இயேசுவுக்கு எப்படிப் பொருந்தும் என்றுகிறித்தவர்கள் சிந்திக்கவேண்டும். தாவீது ராஜாவின் முன்னறிவிப்புக்கேற்ப நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள்மிகுந்த அழகுடையவராக இருந்தார் என்று ஏராளமான நபித்தோழர்கள்அறிவித்துள்ளனர்.

சவுரியவானே! உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடையபட்டயத்தை நீர் உம்முடையஅரையிலே கட்டிக் கொண்டு….

(சங்கீதம் 45:3)

பட்டயத்தை… (அதாவது வாளை-) அரையிலே (அதாவது இடுப்பிலே)கட்டிக்கொண்டு என்பது எதிரிகளுடன் போர் புரிவதைக் குறிக்கின்றது. இயேசு ஒரு போதும் இடுப்பில் வாளைத் தொங்க விட்டதில்லை. எதிரிகளுடன்போர்புரிந்ததுமில்லை. ஆனால் முஹம்மது நபி அவர்கள் வாளேந்திப் போர்புரிந்திருக்கிறார்கள் என்பதுகிறித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிந்தஒன்றாகும்.

சத்தியத்தினிமித்தமும் நீதியுடன் கூடிய சாந்த்ததினிமித்தமும் உமதுமகத்துவத்திலே ஜெயமாக ஏறி வாரும்.உமது வலது கரம்பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப் பண்ணும்

(
சங்கீதம் 45:4)

வரக்கூடியவர் மகத்துவத்துடன் வெற்றிபெறுவார் என்றும் அவரது வலது கரம்பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தாவீது ராஜா கூறுகிறார்.

இயேசு தம் வாழ்நாளில் மகத்துவத்துடன் வெற்றி பெறவில்லை. சாதாரணவெற்றியும் பெறவில்லை. அவரதுஎதிரிகளே வென்றார்கள். பயங்கரமானமுறையில் அவரைக் கொன்றார்கள். (கிறித்தவ நம்பிக்கைப்படி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளிலேயே மகத்தான வெற்றிபெற்றார்கள். எதிரிகளை தம் கரத்தால்சங்காரம் செய்து பயங்கரமானவிளைவுகளை ஏற்படுத்தினார்கள்.

உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள். அவைகள் ராஜாவுடையசத்ருக்களின் இருதயத்துக்குள் பாயும். ஜனசதளங்கள் உமக்கு கீழே விழுவார்கள்.

இயேசு கூர்மையான அம்புகளைப் பயன்படுத்தியதுண்டா? அவை எதிரிகளின்இதயத்தில் தைத்ததுண்டா? அவரைச்சுற்றி இருந்த பல்வேறு கோத்திரங்களும்அவரது ஆளுகையின் கீழ் வந்ததுண்டா? நிச்சயமாக இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்பெய்யக் கூடியவராகஎதிரிகள் மீது குறிபார்த்து வீசக் கூடியவராகஅம்பெய்யஆர்வமூட்டுபவராக இருந்தார்கள்.அவர்களைச் சுற்றியிருந்த எல்லாக் கோத்திரத்தாரும் அவரது ஆளுகையின் கீழ் வந்தார்கள்.

தேவனே உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது. உமது ராஜ்ஜித்தின்செங்கோல் நீதியுள்ளசெங்கோலாயிருக்கிறது.

நபிகள் நாயகம் ஒரு ராஜ்ஜியத்தை ஏற்படுத்தினார்கள். பாரபட்சமற்ற நீதிவழங்கினார்கள் என்பது எதிரிகளும்ஒப்புக்கொண்ட உண்மை. மேலும் அவரதுசிம்மாசனம் என்றென்றைக்கும் உள்ளது. என்ற வாசகமும் நபிகள்நாயகத்துக்குமட்டுமே பொருந்துகிறது. அவர்கள் வாழ்ந்த பகுதியில் அவரது சமுதாயத்தினர் 14நூற்றாண்டுகளாகஆட்சி புரிந்து வருகின்றனர். இது இயேசு விஷயத்தில் எள்ளளவும்பொருந்தாது.

நீர் அநீதியை அக்கிரமத்தை வெறுக்கிறீர். ஆதலால் தேவனே! உம்முடையதேவன் உமது தோழரைப் பார்க்கிலும்உம்மை ஆனந்தத்தால் அபிஷேகம்பண்ணினார்.

இஸ்ரவேல் பிரதேசத்தில் ஆட்சி செய்யும் உரிமையை தேவன் தாவீது ராஜாவிற்குவழங்கி அவரைச்சந்தோஷப்படுத்தினார். முஹம்மது நபிக்கு உலகின் பலபகுதிகளை ஆட்சி புரியும் சந்தோஷத்தை அருளினார்.தன்னை விட பரந்தராஜ்யத்தை அவர் ஆளுவார் என்பதையேஉமது தோழரைப் பார்க்கிலும் (அதாவதுஎன்னைப்பார்க்கிலும்) உம்மை ஆனந்தத்தால் அபிஷேகம் பண்ணினார் என்றவாக்கியத்தின் மூலம் தாவீது ராஜாகுறிப்பிடுகிறார்.

அவர் குறிப்பிட்டவாறு தாவீத ராஜாவை விட மிகப் பெரிய ஆட்சியை நபிகள்நாயகம் நடத்தினார்கள். இயேசுவுக்குஇந்த சந்தோஷம் கிடைக்கவில்லை.

8. 
உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுமுண்டு. ராஜ ஸ்திரீஒப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமதுவலது பாரிசத்தில் நிற்கிறாள்.

இயேசுவுக்கு பைபிள் நம்பிக்கைப்படி ஒரு மனைவி கூட இருக்கவில்லை. நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் பலமனைவியருடன் வாழ்ந்தார்கள். அரச குலத்தைச்சேர்ந்த ஸஃபிய்யாவும் அவர்களின் மனைவியாக இருந்தார்கள்.மக்காவில் ஆட்சித் தலைவராக இருந்த அபூஸுஃப்யானின் மகள் உம்மு ஹபீபாவும் மனைவியாகஇருந்தார்கள்.தாவீது ராஜாவின் இந்த முன்னறிவிப்பு நபிகள் நாயத்தைத் தவிரயாருக்கும் பொருந்துவதாக இல்லை.

9. 
குமாரத்தியே கேள்! நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்! உன்ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும்மறந்துவிடு!

இஸ்ரவேல் சமுதாயத்திக் குமாரத்தியாகப் பாவித்து இஸ்ரவேலரை அழைக்கிறார்.உன் ஜனத்தையும் உன் தகப்பன்வீட்டையும் மறந்துவிட்டு வரக்கூடியவருடன்சேர்ந்து கொள்ளுமாறு தாவீது ராஜா கூறுகிறார். வரக்கூடியவர்இஸ்ரேல் இனத்தைச்சேர்ந்தவராக இருக்க மாட்டார். இஸ்ரவேலர் அல்லாத இனத்தில் தான் அவர்தோன்றுவார்என்பதால் தான் உன் ஜனத்தை மறந்துவிடு என்று குமாரத்திற்குக்கூறுவது போல் இஸ்ரவேலர்களுக்குக் கூறுகிறார்.

இயேசுவைக் குறித்த முன்னறிவிப்பு என்றால் உன் ஜனத்தை மறந்துவிடு என்றுதாவீது ராஜா கூறியிருக்க மாட்டார்.

10.                     
உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன்.இதனிமித்தம் ஜனங்கள்உம்மை என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும்துதிப்பார்கள்.

இயேசுவைக் கிறித்தவர்கள் துதித்தாலும் எல்லா நேரங்களிலும் அவர்துதிக்கப்படுவதில்லை. ஞாயிறுகளிலும்விசேஷ நாட்களில் மட்டுமே அவர்துதிக்கப்படுகிறார். நபிகள் நாயகம் ஒரு வினாடி நேரம் கூடதுதிக்கப்படாமல்இருந்ததில்லை. ஐந்து வேளை தொழுகைக்காகப் பாங்கு சொல்லப்படுவதைஅனைவரும் அறிவோம்.பாங்கில் முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் துதிக்கும்வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு வினாடியும்உலகின் ஏதேனும் ஒருபகுதியில் பாங்கு சொல்லப்படாமல் இருப்பதில்லை. இதனால் ஒவ்வொரு வினாடிநேரமும்அவர் துதிக்கப்படுகிறார்.

கடமையான தொழுகைகள், மற்றும் உபரியான தொழுகைகளில் நபிகள் நாயகத்தைத்துதிக்கும் சில வாசகங்கள்இடம்பெற்றுள்ளன. உலகின் ஏதேனும் ஒரு பகுதியில்தொழுகை நடத்தப்படாத எந்த வினாடியும் இல்லை. எனவேநபிகள் நாயகம்ஒவ்வொரு வினாடி நேரமும் மக்களால் போற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.இந்தக்காரணத்தினாலும் அவர் எந்நேரமும் புகழப்பட்டவராக ஆகிறார்.

தாவீது ராஜாவின் இந்த முன்னறிவிப்பில் கூறப்படும் அத்தனை தகுதிகளும் நபிகள்நாயகத்திற்குக் கச்சிதமாகப்பொருந்துகின்றன. பைபிளை வேதம் என்று நம்பக்கூடியகிறித்தவர்கள்தாவீது ராஜாவை மதிக்கும் கிறித்தவர்கள்என்ன செய்யவேண்டும்?

தமது ஜனத்தையும் வீட்டையும் மறந்துவிட்டு மகா சௌந்தர்யமுள்ளநேர்மையாளரைவெற்றி வீரரை ஏற்கவேண்டாமா? தாவீது ராஜாவின்போதனைக்குச் செவிசாய்க்க வேண்டாமா?

நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக் கொள் என்று தாவீது ராஜா கூறியவாறுசிந்திக்க வேண்டாமா?

                                                                                                                                            இம்ரத்த  கமருன்னிஸா

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

%d bloggers like this: