Menu

Debate
கிறிஸ்தவர்களுடன் வேறு என்ன தலைப்பில் விவாதம் நடைப்பெற உள்ளது?

DSC01595

கேள்வி
அஸ்ஸலாமு அலைக்கும்

கிறிஸ்தவர்களுடன் வேறு என்ன தலைப்பில் விவாதம் நடைபெருரஇருக்கிறது?

PJ அவர்களின் பதில்

கிறித்தவர்களுடன் என்னென்னதலைப்பில் விவாதிக்க வேண்டும் என்பது குறித்து ஒப்பந்தத்தில் தெளிவாகக்கூறப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தை முழுமையாக வாசிக்க

http://www.onlinepj.com/PDF/Oppattam-Tamil.pdf

இதில்பல தலைப்புகள் ஜோடி ஜோடியானவை. அதாவது பைபிள் இறைவேதமா என்ற தலைப்பில் நாம் பைபிளைவிமர்சிப்போம். அது போல் அடுத்த தலைப்பாக குர் ஆன் இறைவேதமா என்ற தலைப்பில்அவர்கள் விமர்சிப்பார்கள். இப்படி ஜோடி ஜோடியாக விவாதம் நடக்க வேண்டும்.

ஆனால் பைபிள்பற்றிய விவாதம் முடிந்த பின் குர் ஆன் தலைப்பு அவர்களைப் பொருத்தவரை முக்கியமானதாகஇருந்தும் லைவ் பண்ணக் கூடாது என்று காரணம் கூறி பின் வாங்கி விட்டனர். அவர்கள்எப்போது பின்வாங்கினார்களோ அப்போதே ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது. ஆனாலும்அவர்கள் குர்ஆனுக்கு எதிராக்க்கேட்கப்படும் கேள்விகளை எதிர் கொள்ள நமக்கு துணிவு இல்லாத்தால் லைவ் பண்ண வேண்டும்என்று நாம் கூறி நாம் விவாத்த்தில் இருந்து பின்வாங்குவது போல் சித்தரித்தனர்.குர் ஆனைப் பற்றிய கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை என்ற தோற்றத்தை அவர்கள்ஏற்படுத்தியதால் அவர்களுக்காக பல வகையில் நாம் கீழிறங்கி அவர்களின் நிபந்தனைகளைஏற்றுக் கொண்டு குர் ஆன் குறித்த விவாதத்துக்கு முன் வந்தோம்.

பைபிள்குறித்து நாம் கேள்வி கேட்ட போது அவர்கள் திணறியது போல் குர் ஆனைக் குறித்துஅவர்கள் கேட்கும் போது நாம் திணருவோம் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்அல்லாஹ்வின் அருளால் முதல் தலைப்பை விட இர்ண்டாம் தலைப்பில் இன்னும் உறுதியானவெற்றியை அல்லாஹ் அளித்தான். அதன் பின்னர் ஒப்பந்தம் பற்றி அவர்களும் பேசவில்லை.நாமும் பேசவில்லை. இவ்விரண்டு தலைப்புகளுக்குள் எல்லாமே தெளிவாகி விட்டதால் முறியடிக்கவேண்டிய அளவுக்கு அவர்கள் முறியடிக்கப்பட்டு விட்டனர்.

அவர்கள்தரப்பில் மற்ற தலைப்புகள் குறித்து பேசினால் இப்போது விட்டுக் கொடுத்தது போல்விட்டுக் கொடுத்து அந்த தலைப்புகளையும்இன்ஷா அல்லாஹ் சந்திப்போம். அவர்கள் ஆர்வம்காட்டாவிட்டால் நாமும் விட்டு விடுவோம்.

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

%d bloggers like this: