Menu

பெங்களூரில் உள்ள இந்திய வேதாகமச் சங்கம் தமிழில் ஒரு பைபிளை வெளியிட்டுள்ளது. இந்தச் சங்கம் புரோட்டஸ்டண்டு எனும் கிறித்தவப் பிரிவைச் சார்ந்தது. இந்த பைபிளின் முதல் பக்கத்தில், ‘எபிரேயு, கிரேக்கு எனும் மூல பாஷைகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Read More

ஒரு நூலை இறைவேதம் என்று நம்ப வேண்டுமானால் அதை வேதமென்று நம்புகின்ற மக்கள் அனைவரிடமும் ஒரே விதமாக அமைந்திருப்பது அவசியமாகும். கூட்டல், குறைத்தல், திருத்தல், மாற்றுதல் போன்ற குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டதாகவும் அது இருப்பது அவசியமாகும்.

Read More

வேதம் என்பது கடவுளால் மனிதனுக்குக் காட்டப்பட்ட நல்வழியாகும். கடவுள் காட்டுகின்ற அந்த வழி அறிவுக்கு ஏற்றதாகவும், நியாயமானதாகவும், நடைமுறைச் சாத்தியமானதாகவும் இருப்பது அவசியமாகும்.

Read More

காலத்திற்குக் காலம், நாட்டுக்கு நாடு பைபிளில் சேர்த்தல்களும் நீக்கல்களும் நிகழந்து கொண்டேயிருக்கின்றன என்பதற்கு நமது நாட்டிலேயே ஒரு சான்றை உங்களுக்குக் காட்டுகிறோம். இதற்குப் பிறகு நிச்சயமாக, பைபிள் இறைவேதமன்று;மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்டது என்ற முடிவுக்கு நீங்கள் வந்தே தீர்வீர்கள். இதோ அச்சான்று:

Read More

இயேசுவும் அவருக்கு முன்னர் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளும் கடவுள் ஒரே ஒருவர் தான் என்ற கொள்கையைப் போதித்தனர். இந்தக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்தவரும் பவுலடிகள் தான். கடவுள் குறித்து கடவுள் கூறுவதையும் இயேசு உள்ளிட்ட தீர்க்கதரிசிகள் கூறுவதையும் சிந்தியுங்கள்.

Read More

மனிதர்களின் பாவங்களைச் சுமந்து கொள்வதற்காக இயேசு தன் உயிரைப் பலி கொடுத்தார் என்பதில் எள்ளளவும் உண்மை இல்லை. பைபிளை நாம் வாசிக்கும் போது பலியாவதை இயேசு அறவே விரும்பவில்லை; அதைத் தவிர்க்க தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் அவர் செய்தார். ஆனாலும் எதிரிகளிடம் மாட்டிக் கொண்டார். அவர் விரும்பாமலே எதிரிகளால் சிலுவையில் அறையப்பட்டார் என்று அறிய முடிகிறது.

Read More

பைபிளின் கோட்பாட்டின் படி இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டிருக்க முடியாது. ஏனெனில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டவர் சாபத்திற்கு உரியவர் என்று பைபிள் கூறுகிறது.

Read More

இயேசுவைப் பிடிக்க அதிகாரிகள் பெரும் படையுடன் வந்திருக்கும் போது பிரதான ஆசாரியானுடைய காதை பேதுரு வெட்டியதாக மேற்கண்ட வசனத்தில் யோவான் கூறுகிறார். காது வெட்டிய கதையை மத்தேயுவும் கூறுகிறார்.

Read More

இயேசுவை இறைவனின் குமாரர் என்று நம்பி, அதைப் பிரச்சாரமும் செய்யக் கூடிய கிறித்தவர்கள் இயேசுவைத் தம் குமாரர் எனக் கர்த்தர் கூறுகிறார் என்று பைபிள் கூறுவதை முதலாவது ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ‘இவர் என்னுடைய நேச குமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன்‘என்று உரைத்தது. (மத்தேயு 3:17)

Read More

பைபிளில் இயேசு சில இடங்களில் ஆண்டவர்‘ எனவும், தேவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். ‘இதற்கு கடவுள் என்று பொருள்; இயேசு கடவுள் எனத் தெளிவாக குறிப்பிடப்படுவதால் அவர் கடவுள் தாம்‘ என்பது கிறித்தவர்கள் எடுத்துக் காட்டும் மற்றொரு ஆதாரமாகும். இந்த ஆதாரமும் அவரைக் கடவுள் என்று ஏற்பதற்கு உதவப் போவதில்லை.

Read More