கிறிஸ்தவ கொள்கை
அல்லாஹ் எனும் ஒரே ஒரு கடவுள் தான் இருக்கிறான். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவனைத் தவிர யாரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பதை நம்புவதும், மனிதர்களை நல்வழிப்படுத்த மனிதர்களில் இருந்தே தூதர்களை இறைவன் நியமித்து வந்தான்.
அல்லாஹ் எனும் ஒரே ஒரு கடவுள் தான் இருக்கிறான். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவனைத் தவிர யாரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பதை நம்புவதும், மனிதர்களை நல்வழிப்படுத்த மனிதர்களில் இருந்தே தூதர்களை இறைவன் நியமித்து வந்தான்.
இயேசுவின் சிலுவைப் பலி கொள்கை சரியானது தானா என்பதை அறிந்து கொள்வதற்கு முன்னாள் இந்தக் கொள்கையைச் சொல்பவர்களின் நம்பகத் தன்மையை கிறித்தவ சமுதாய மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.
கர்த்தர் (இறைவன்) முதன் முதலாக ஆதாம் என்பவரைப் படைத்தார். அவருக்குத் துணையாக ஏவாள் எனும் பெண்ணைப் படைத்து அவ்விருவரையும் ஏடன் எனும் தோட்டத்தில் தங்க வைத்து எல்லாவிதமான கனி வகைகளையும் அங்கே கிடைக்கச் செய்தார். இந்தத் தோட்டத்தில் விரும்பியவாறு உண்ணுங்கள்; ஆனால் குறிப்பிட்ட மரத்தின் கனியைப் புசித்து விட வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்திருந்தார்.
கிறித்தவர்களின் போலித் தனத்தையும் பைபிள் மனிதனால் எழுதப்பட்டது தான் என்பதையும், இயேசு இறைவனின் குமாரர் அல்ல என்பதியும் இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக கூறுவது பொய் என்பதையும் மற்றவரின் பாவங்களைசுமக்க இயேசு பலியானார் என்பது பைபிளுக்கு முரணானது என்பதையும் அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்துப் போடும் அறிஞ்ர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.நம்மை விட சிறப்பாக இதைச் செய்யக் கூடியவர்களும் உள்ளனர்.
கிறித்தவர்கள் எத்தனை பிரிவுகளாக ஆனாலும் சட்டதிட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் ஆளுக்கொரு வழியில் சென்றாலும் இறை வேதம் என்று அவர்கள் நம்பும் பைபிளையே ஆளுக்கு ஒரு விதமாக உருவாக்கிக் கொண்டாலும் அவர்கள் அனைவருமே ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்கு – கர்த்தருக்கு -இணைகற்பிக்கக் கூடியவர்களாக உள்ளனர்.
இது புதுச் செய்தியாக உள்ளது. நாம் கேள்விப்பட்டதில்லை.
எல்லா மதமும் ஒரே கொள்கையைத் தான் சொல்கிறது என்பது உண்மைக்கு மாறானதாகும். மனமறிந்து நாம் சொல்லும் பச்சைப் பொய்யாகும். நமது சிந்தனையம் மழுங்க வைப்பதற்காக நமக்கு நாமே பூட்டிக் கொள்ளும் விலங்கு தான் இந்த வாசகம்.
நீங்கள் உங்கள் குருட்டு நம்பிக்கை அடிப்படையில் இருந்து கொண்டு இவ்வாறு கூறுகிறீர்கள். அந்திக் கிறிஸ்து பற்றிய செய்தி 1யோவானில் உள்ளது என்று தான் ஆதாரம் காட்டும் போது குறிப்பிட்டுள்ளோம். 1யோவானில் தான் அது உள்ளது. ஆனால் எங்களின் நம்பிக்கையும் பைபிள் ஆய்வாளர்களின் நம்பிக்கையும் உங்கள் நம்பிக்கையில் இருந்து மாறுபட்டதாகும்.
பவுல் கொல்லப்பட்டாரா இயற்கையாக மரணித்தாரா என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் அவரைக் கொலை செய்ய யூதர்கள் முயற்சித்தனர், பின்னர் சிறையில் அடைத்தனர். இதற்குக் காரணம் யூத ஆலயங்களுக்குள் யூதர் அல்லாதவரகளை நுழையச் செய்தது தான். இதை யூதர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். இயேசு கூட யூதர் அல்லாதவர்களை விரட்டி அடித்திருக்கும் போது இவர் அதை மீறியதால் கடும் எதிர்ப்புக்கு ஆளானார்.