முஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே?
”மக்காவில் உள்ள ஆலயமாகிய கஃபாவின் சுவற்றில் ஒரு மூளையில் பதிக்கப்பட்டுள்ள“ஹஜ்ருல் அஸ்வத்” எனும் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஒரு புறம் வழபட்டுக் கொண்டுஇன்னொரு புறம் ஏக இறைவனை மட்டும் வணங்க வேண்டும் என்று கூறுவது முரணாகஅமைந்துள்ளது. இஸ்லாத்தின் கடவுட் கொள்கையில் தெளிவின்மையை இதுகாட்டுகிறது.” என்பதும் மாற்றாரின் விமர்சனங்களில் ஒன்றாகும்.