நபிகள் நாயகம் காலத்தில் தவ்ராத் இருந்ததா?
கேள்வி
அஸ்ஸலாமு அழைக்கும்,
தவ்ராத் அருளப்படுவதற்கு முன் இஸ்ராயீல் (யஃகூப்) தம் மீது தடை செய்து கொண்டதைத் தவிர எல்லா உணவுகளும் இஸ்ராயீலின் மக்களுக்கு அனுமதிக்கப்பட்ட தாகவே இருந்தன. ”நீங்கள் உண்மையாளர் களாக இருந்தால் தவ்ராத்தைக் கொண்டு வந்து படித்துக் காட்டுங்கள்!” என்று (முஹம்மதே! யூதர்களிடம்) கேட்பீராக! 3:93
நபியவர்கள் காலத்தில் தவ்ராத்தும் , இன்ஜிலும் இருந்ததா?.
ஏன் என்றால் (தவ்ராத்தைக் கொண்டு வந்து படித்துக் காட்டுங்கள்) என்று அல்லாஹ் கூறுகிறான்.உண்மையான தவ்ராத் இருந்தால் மட்டுமே அவர்களால் இதை செய்யமுடியாது. அவர்கள் அதை மாற்றி இருந்தால் அவர்கள் கொண்டு வந்து படித்துக் காட்டி இருப்பர்கள்.
PJ அவர்களின் பதில்
நபியின் காலத்தில் தவ்ராத்தும் இஞ்சீலும் இருந்தன. இது நீங்கள் எடுத்துக்காட்டிய வசனங்களிலும் இன்னும் பல வசனங்களிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்போது கிறித்தவர்கள கையில் தவ்ராத்தும் இல்லை. இஞீலும் இல்லை. இது குறித்து பைபிள் இறைவேதமா என்ற தலைப்பில் நடந்த விவாதத்தின் இறுதி அமர்வில் தெளிவாக விளக்கியுள்ளோம். அதைப் பார்க்கவும்
அதற்கான லின்க் இது தான்http://onlinepj.com/bayan-video/vivathangal/debate-bible/