மூஸாவைப் போன்றவர் யார்?
பைபிளில் பழைய ஏற்பாட்டில் 5வது ஆகாமம், உபாகமம் எனப்படும். மோஸே (மூஸா) எனும் தீர்க்கதரிசிக்கு அருளப்பட்டதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்ற இந்த ஆகமத்தில் இரண்டு முன்னறிவிப்புகள் காணப்படுகின்றன.
ஒன்று மோசே, மக்களுக்குச் சொன்ன முன்னறிவிப்பு,
மற்றொன்று கர்த்தர் மோசேயிடம் சொன்னது.
ஏறக்குறைய ஒரே விதமாக அமைந்த இந்த இரண்டு முன்னறிவிப்புகளும் எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு தீர்க்கதரிசியின் அடையாளத்தைக் கூறுகின்றன.
இஸ்ரவேல் அனைவரையும் மோசே அழைத்து அவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவைகளையும் அவர்கள் தவிர்க்க வேண்டியவைகளையும் விரிவாகக் கூறுகின்றார். வரக்கூடிய தீர்க்கதரிசியைப் பற்றியும் அதனிடையே பின்வருமாறு கூறுகிறார்.
உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார். அவருக்குச் செவி கொடுப்பீர்களாக. (என்றார்).
(உபகாமம் 18:15)
கர்த்தர் மோசேயிடம் இதே விஷயத்தைப் பின்வருமாறு கூறுகிறார்.
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி, அவர்கள் சொன்னது சரியே உன்னைப் போல் ஒரு தீ்ர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணி என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்.நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்வார்.
(உபாகமம் 18:17,18)
இங்கே முன்னறிவிக்கப்படுபவர் யார்?
மோசேவுக்குப் பின் அந்தச் சமுதாயத்திற்கு வழிகாட்டியாகவும்,தலைவராகவும் திகழ்ந்த யோசுவாவையே இந்த முன்னறிவிப்பு அடையாளம் காட்டுகிறது என்று யூதர்கள் நம்புகின்றனர். இல்லை இத இயேசுவையே குறிக்கிறது என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.
இந்த முன்னறிவிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் உரிய அழுத்தம் கொடுத்துச் சிந்தித்தால் இது யோசுவாவையும் குறிக்காது,இயேசுவையும் குறிக்காது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இது யாரைக் குறித்த முன்னறிவிப்பு என்பதை அறிந்து கொள்வதற்கு முன் இது யோசுவாவையும் இயேசுவையும் குறிக்காது என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.
மோசே இதை யாரிடம் கூறினார்? இஸ்ரவேலர்டகளிடம் கூறினார்.இஸ்ரவேலர்களில் ஒன்றிரண்டு நபர்களை அழைத்து இதைக் கூறவில்லை. மாறாக இஸ்ரவேலர் அனைவரையும் அழைத்து அவர் இவ்வாறு கூறியதாக உபாகமம் கூறுகிறது.
வரக்கூடியவர் இஸ்ரவேலர்களில் ஒருவராக இருந்தால் மோசே எப்படி கூறியிருக்க வேண்டும்? உங்களுக்காக உங்களிலிருந்து என்று தான் கூறியிருக்க வேண்டும்.அவ்வாறு கூறாமல் உனக்காக என் சகோதரரிலிருந்து என்று மோசே கூறியதாக உபாகமம் கூறுகிறது. உங்களிலிருந்து அவர் தோன்றுவார் என்று மோசே கூறாமல் உங்கள் சகோதரரிலிருந்து தோன்றுவார் என்று கூறியிருப்பதால் அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேல் இனத்தில் தோன்ற மாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
மோசேயிடம் கர்த்தர் கூறிய வார்த்தையைக் கவனியுங்கள்! அந்த வார்த்தையும் இதே கருத்திலேயே அமைந்திருக்கிறது.
”அவர்களுக்காக அதாவது இஸ்ரவேலர்களுக்காக அவர்களிலிருந்து – அதாவது இஸ்ரவேல் இனத்திலிருந்து”அவர் தோன்றுவார் எனக் கூறப்படவில்லை. மாறாகஅவர்களின் அதாவது இஸ்ரவேலரின் – சகோதரரிலிருந்து –அதாவது இஸ்ரவேலரின் சகோதர இனத்திலிருந்து தான் அந்தத் தீர்க்கதரிசி தோன்றுவார் என்று கூறப்பட்டுள்ளது.
மோசே மக்களிடம் செய்த முன்னறிவிப்பும், மக்களுக்கு முன்னறிவிப்புச் செய்யுமாறு கர்த்தர் இட்ட கட்டளையும் வரக்கூடியவர் இஸ்ரேல் இனத்தில் தோன்ற மாட்டார் என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமின்றி தெரிவித்து விடுகின்றது.
இது யோசுவாவைத் தான் குறிக்கிறது என்று யூதர்கள் கூறுகிறார்கள். ஆனால் யோசுவா இஸ்ரவேல் இனத்தைச் சேர்ந்தவர்.
அது போல் இது இயேசுவைக் குறித்த முன்னறிவிப்பு என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் இயேசுவும் இனத்தால் இஸ்ரவேலர் தான்.
எனவே இஸ்ரவேல் இனத்தைச் சேராத ஒருவரைப் பற்றிக் கூறும் வேத வரிகள் இஸ்ரவேல் இனத்தைச் சேர்ந்த இவ்விருவரையும் நிச்சயம் குறிக்க முடியாது.
அப்படியானால் இது யாரைத் தான் குறிப்பிடுகிறது? இதை விரிவாக பைபிளின் துணையுடன் நாம் ஆராய்ந்து பார்ப்போம்.
இஸ்ரவேலர்களிலிருந்து தோன்றாமல் இஸ்ரவேலரின் சகோதரரிலிருந்து தான் அவர் தோன்ற வேண்டும்.இஸ்ரவேலரின் சகோதரர்கள் என்று யாரைக் கூறலாம்.பைபிளின் வெளிச்சத்திலேயே இதற்கு விடை காண்போம்.
ஆபிரகாமுடைய சந்தததிகளில் இரு இனத்தவர்கள் உருவானார்கள் ஈசாக் வழியில் தோன்றியவர்கள் இஸ்ரவேலர்கள். இஸ்மவேல் வழியில் தோன்றியவர்கள் இஸ்மவேலர்கள். ஆதியாகாமம் இதை விரிவாக விளக்குகின்றது.
பைபிளில் இஸ்மவேலரின் சகோதரர் என்று கூறப்பட்டால் அவர்கள் இஸ்ரவேலர் தாம். இஸ்ரவேலரின் சகோதரர் எனக் கூறப்பட்டால் அவர்கள் இஸ்மவேலர் தாம்.இதைத் தவிர வேறு பொருள் கொள்ள வழி இல்லை.இன்னும் சொல்வதானால் பின் வரும் பைபிள் வசனம் இதைத் தெளிவாகவும் குறிப்பிடுகிறது.
அவர்கள் (இஸ்மவேலின் பனிரெண்டு குமாரர்கள்) கவீலா துவக்கி சூர் மட்டும் வாசம் பண்ணி வந்ததார்கள். சூர் எகிப்துக்குக் கிழக்கே அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கிறது. அவன் தன் சகோதரருக்குக் கிழக்கே குடியேறி இருந்தான்.
(ஆதியாகமம் 25:18)
இஸ்மவேல் தன் சகோதரருக்கு அதாவது இஸ்ரவேலருக்கு கிழக்கே குடியிருந்தான் என்று இவ்வசனம் கூறுகிறது.
இஸ்ரவேலரின் சகோதரரிலிருந்து தீர்க்கதரிசி தோன்றுவார் என்றால் ”அவர் இஸ்ரவேலர்களில் ஒருவராக இருக்க மாட்டார். இஸ்மவேலர்களிலேயே தோன்றுவார்” என்பது தான் மேற்கண்ட முன்னறிவிப்பின் பொருளாக இருக்க முடியும்.
இஸ்மவேலர்களில் தோன்றும் தீர்க்கதரிசியைக் குறிப்பிடும் இந்தமுன்னறிவிப்புஇயேசுவுக்கோ, யோசுவாவுக்கோ எப்படிப் பொருந்தும் என்பதைக் கிறிஸ்தவர்களும்,யூதர்களும்சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இந்த முனனறிவிப்புச் செய்யப்பட்டதிலிருந்து இன்று வரை இஸ்மவேலர்களில் ஒரேஒருவர் தாம் தம்மை தீர்க்கதரிசிஎன்று வாதிட்டிருக்கிறார். அவர் தாம் முஹம்மதுநபி (ஸல்) ஆவார். இந்த முன்னறிவிப்பு முஹம்மது நபியைத் தான்குறிக்கிறதுஎன்பதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன.
இந்த முன்னறிவிப்பில் ”என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசி” என்று மோசேவும், ”உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசி”என்று மோசேயை நோக்கி கர்த்தரும்கூறுகின்றனர். வரக்கூடிய தீர்க்கதரிசி மோசேயைப் போன்றவராக இருக்கவேண்டும்என்பது இதிலிருந்து தெரிகின்றது.
மோசேயைப் போன்றவர் என்ற ஒப்பு நோக்குதல் தீர்க்கதரிசி என்பதை மட்டும்அடிப்படையாகக் கொண்டுகூறப்படவில்லை. மாறாக, எல்லா வகையிலும்மோசேயைப் போன்றவராக அந்தத் தீர்க்கதரிசி இருப்பார்என்பதையே இந்த ஒப்பீடுகூறுகிறது.
மோசேவுக்குப் பின்னர் இயேசு வரை சாலமோன், எசக்கியேல், தானியேல் மற்றும்பல தீர்க்கதரிசிகள்வந்துள்ளனர். தீர்க்கதரிசி என்ற வகையில் இந்த உவமைகூறப்பட்டுள்ளது என்றால் இவர்கள் அனைவருக்குமேஇந்த முன்னறிவிப்புபொருந்தும். இயேசுவைத் தான் குறிக்கும் என்று கூற முடியாது.
மேலும் மோசேவுக்குப் பின் ஒரு தீர்க்கதரிசி அல்ல. பல தீர்க்கதரிசிகள்வந்துள்ளனர். இதைப் பற்றிமுன்னறிவிப்புச் செய்வதென்றால் உன்னைப் போல் பலதீர்க்கதிரிசிகள் என்று தான் கூறவேண்டும். அவ்வாறுகூறாமல் ஒரு தீ்ர்க்கதரிசிஎன்று கூறப்படுகிறது. எனவே ”உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசி” என்பதுஎல்லாவகையிலும் மோசேயைப் போன்று திகழும் குறிப்பிட்ட ஒரேயொரு தீர்க்கதரிசியேமுன்னறிவிப்புச்செய்கிறது என்பதில் ஐயமில்லை.
இயேசு எல்லா வகையிலும் மோசேயைப் போன்றவராக இருந்தாரா? நிச்சயமாகஇல்லை.
தீர்க்கதரிசியா? குமாரனா?
கிறிஸ்தவர்கள்மோசேயை ஒரு தீர்க்கதரிசியாக மட்டுமே ஏற்றுக் கொள்கின்றனர்.ஆனால்இயேசுவைத் தீர்க்கதிரிசி என்று நம்பாமல் கர்த்தரின் குமாரர் என்றுநம்புகின்றனர். பைபிளின் முன்னறிவிப்புஇயேசுவையே குறிக்கிறது என்றுஉண்மையிலேயே கிறிஸ்தவர்கள் நம்பினால் இயேசுவும், மோசேயைப் போன்றஒருதீர்க்கதரிசி தாம். கர்த்தரின் குமாரர் அல்லர் என்று நம்ப வேண்டும். அவரைக்கர்த்தரின் குமாரர் என்று ஒரு புறம்கூறிக் கொண்டு இந்த முன்னறிவிப்பும்அவரையே குறிக்கிறது என்றும் கூறுவது முரணானதும்நகைப்பிற்குரியதுமாகும்.
முஹம்மது நபியவர்கள் இன்று வரை கடவுளின் குமாரர் என்று நம்பப்படவில்லை.மோசேயைப் போன்ற ஒருதீர்க்கதரிசி என்றே நம்பப்படுகிறார். இந்த வகையில் இதுநபிகள் நாயகத்தைத் தான் குறிக்கிறது.
அதிசயமான பிறப்பு
மோசே தாய், தந்தை வழியாகச் சாதாரணமான முறையில் பிறந்தார்.இயேசுவோதந்தையின்றி அதிசயமான முறையில் பிறந்தார். இந்த வகையிலும் இயேசுமோசேவைப் போன்றவராகஇருக்க முடியாது.
முஹம்மது நபியவர்கள் மோசேயைப் போல் தாய் தந்தை வழியாகச் சாதாரணமானமுறையில் பிறந்தனர். இந்தவகையிலும் இது நபிகள் நாயகத்துக்கே பொருந்தும்.
பிரம்மச்சாரி
மோசே திருமணம் செய்து சந்ததிகளைப் பெற்றது போல் முஹம்மது நபியும்திருமணம் செய்துசந்ததிகளைப் பொற்றார்கள். இயேசுவோ (பைபிளின்வரலாற்றுப்படி) திருமணம் செய்யாத பிரம்மச்சாரியாகவேஇருந்துள்ளதால் இந்தவகையிலும் அவர் மோசேயைப் போன்றவராக முடியாது.
வாழ்நாளிலேயே அங்கீகாரம்
மோசே, தம் ஆயுள் காலத்திலேயே அவரது சமுதாயத்தினரால் தீர்க்கதரிசிஎன்றுஏற்றுக் கொள்ளப்பட்டார். முஹம்மது நபியும் அவர்களது ஆயுள் காலத்திலேயேஅவர்களது சமுதாயத்தினரால்தீர்க்கதரிசி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். இயேசுதம் ஆயுள் காலத்தில் அவரது சமுதாயத்தினரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.இன்று வரையிலும் கூட இஸ்ரவேலர்களான யூதர்களால் அவர் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
அவர் (இயேசு) தமக்குச் சொந்தமானவற்றில் வந்தார். அவருக்குச்சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
(யோவான் 1:11)
இயேசு தமது இனத்தவர்களால் தாம் வாழும் காலத்தில் அங்கீகரிக்கப்படவில்லைஎன்று யோவான் பகிரங்கமாகஒப்புக் கொள்கிறார்.
எனவே இந்த வகையிலும் நபிகள் நாயகம் அவர்களே இந்த முன்னறிவிப்புக்குப்பொருந்துகிறார்கள்.
ஆட்சி புரிதல்
மோசேதீர்க்கதரிசியாக இருந்ததுடன் முடிவில் தம் மக்கள் மீது ஆட்சிசெலுத்தினார். முஹம்மது நபியும்இவ்வாறே தம் மக்கள் மீது ஆட்சிசெலுத்தினார்கள். ஆனால் இயேசு தம் வாழ்நாளில் பன்னிரண்டு சீடர்களைத்தவிரஎவரையும் உருவாக்கவில்லை. இந்த வகையில் இயேசு மோசேயைப் போன்றவராகஇல்லை.
இயற்கையான மரணம்
மோசே தம் வாழ்நாள் முடிந்து இயற்கையான முறையில் மரணமடைந்தார்.முஹம்மதுநபியும் அவ்வாறே மரணமடைந்தார்கள். ஆனால் இயேசு (கிறிஸ்தவநம்பிக்கைப்படி) மூன்றாம் நாளில்உயிர்த்தெழுந்தார். இதனாலும் இயேசுமோசையைப் போன்றவராக இல்லை.
பொறுப்பை ஒப்படைத்தல்
மோசே மரணிக்கும் சமயத்தில் யோசுவாவின் தலையில் கை வைத்துத் தமக்குப்பின்ஆட்சிப் பொறுப்பை யோசுவா நடத்துவார் என்று மறைமுகமாக அடையாளம்காட்டிச் சென்றார். முஹம்மத நபியும்அபூபக்கரை அடுத்து ஆட்சியாளராக சூசகமாகஉணர்த்திச் சென்றார். ஆனாலும் இயேசு இவ்வாறு அறிவித்துச்செல்லவில்லை.
எதிரிகளை ஒழித்தல்
மோசே தம் வாழ்நாளிலேயே தம் எதிரிகள் அழிந்து போனதைக் கண்டார்.முஹம்மது நபியும்தம் எதிரிகளைத் தம் வாழ்நாளிலேயே அழித்தார்கள்.இயேசுவோ எதிரிகளிடம் தோற்றுப் போனார். இந்த வகையிலும்நபிகள் நாயகமேமோசேயைப் போன்றவராக உள்ளார்.
போராளிகள்
மோசேயும் அவரது சகாக்களும் ஆயுதம் தரித்துப் போர் புரிந்தனர். முஹம்மதநபியவர்களும் அவரதுசகாக்களும் அவ்வாறே ஆயுதம் தரித்துப் போர் புரிந்தனர்.இயேசுவோ வாழ்நாள் முழுவதும் சமாதானமேபேசியிருக்கிறார். எனவே இயேசு,மோசேயைப் போன்றவராக முடியாது.
குற்றவியல் சட்டங்கள்
திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபச்சாரம் போன்ற குற்றங்களில்ஈடுபடுவோரைமோசே தண்டித்தார். அத்தகைய சட்டங்கள் அவருக்குவழங்கப்பட்டிருந்தன. முஹம்மது நபிக்கும் அவ்வாறேசட்டங்கள்வழங்கப்பட்டிருந்தன. அதைச் செயல்படுத்தினார்கள். விபச்சாரம் செய்த ஒரு பெண்இயேசுவின் முன்னால்நிறுத்தப்பட்ட போது ”எந்தத் தப்பும் செய்யாதவன் இவள் மீதுகல்லெறியட்டும்” என்று இயேசு கூறியுள்ளார். எந்தகுற்றவியல் சட்டங்களையும்அமுல்படுத்தவில்லை.
மோசேயும் முஹம்மது நபியும் ஆடு மேய்த்துள்ளனர். உழைத்து உண்டனர்.தீர்க்கதரிசிகளாக ஆவதற்கு முன்வெளிநாடுகளுக்குச் சென்றனர். இது போல்இன்னும் அநேக ஒற்றுமைகள் அவ்விருவருக்கிடையே இருந்தன.இயேசுவோஎல்லா வகையிலும் மோசேயிடமிருந்து வேறுபட்டவராக இருந்தார்.
எள்ளளவும் ஐயமின்றி பைபிளின் முன்னறிவிப்பு முஹம்மது நபியைக் குறித்தமுன்னறிவிப்புத் தான் என்பதைநடுநிலையுடன் சிந்தித்தால் உணரலாம்.
ஒரு வாதத்துக்காக இயேசு மோசேயைப் போன்றவர் தாம் என்று ஏற்றுக்கொண்டாலும் இந்த முன்னறிவிப்புஇயேசுவைக் குறித்தது என்று கூற முடியாது.மோசேயைப் போன்ற அந்த தீர்க்கதரிசி இஸ்மவேலர்களிலிருந்து தான் வரமுடியும்.இஸ்ரவேலராக இருக்க முடியாது.
இஸ்மவேலர் இனத்தில் தோன்றியவரும் எல்லா வகையிலும் மோசேயைப்போன்றவருமான முஹம்மதுநபியைத் தான் இந்த தீர்க்கதரிசனம் கூறுகிறதுஎன்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இப்படி ஒருவர் தோன்றுவார் என்று அறிந்து கொள்வதற்காக இந்த முன்னறிவிப்புச்செயல்படவில்லை. மாறாகஅவ்வாறு அந்த தீர்க்கதரிசி வரும்போது அவரைப்பின்பற்றி நடக்க வேண்டும். அவரது கட்டளைக்குக் கட்டுப்படவேண்டும் என்பது தான் இந்த முன்னறிவிப்பின் நோக்கம்.
ஏனெனில் வரக்கூடிய தீர்க்கதரிசியைப் பற்றி முன்னறிவிப்புச் செய்த மோசேஇறுதியாக ”அவருக்குச் செவிகொடுப்பீராக” என்று முடிக்கறார்.
நபிகள் நாயகத்துக்குச் செவி கொடுப்பதன் மூலம் தான் அந்தக் கட்டளையைநிறைவேற்ற முடியும்.
பைபிளை வேத வரிகள் என்றும் கர்த்தரின் வார்த்தை என்றும் நம்புகின்ற கிறித்தவஅன்பர்களே! நடுநிலைக்கண்ணோடு சிந்தித்துப் பார்த்து உண்மையை உணருங்கள்.
அபூ யாஸிர்